FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

என்கவுன்டர் செய்யப்பட்ட லஷ்கர் பயங்கரவாதி லத்தீஃப் பட் யார்? அதிரவைக்கும் பின்னணி

என்கவுன்டர் செய்யப்பட்ட லஷ்கர் பயங்கரவாதி லத்தீஃப் பட் யார் என்பது குறித்த அதிரவைக்கும் பின்னணி பற்றி..

லஷ்கர்-இ-தொய்பா தளபதி லத்தீஃப் பட் - x
பகிர்:

ஜம்மு-காஷ்மீரின் குல்காம் பகுதியில், ராணுவத்தினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த மோதலில் மசூதி ஒன்றில் பதுங்கியிருந்த ​​லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் தளபதி லத்தீஃப் பட் சுற்றிவளைக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார்.

பாதுகாப்பு அமைப்புகளை பயன்படுத்தி வரும் பயங்கரவாதிகளின் விவரங்களில், லத்தீஃப் பட் கடந்த 2025-ஆம் ஆண்டு நவம்பர் 18-ஆம் தேதி முதல் பயங்கரவாதத் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறார்.

Advertisement

Advertisement

பயங்கரவாத அமைப்பில் இணைந்து செயல்படத் தொடங்கி சரியாக ஓராண்டுக்குப் பிறகு, இன்று அதே தேதியில் பயங்கரவாதி லத்தீஃப் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் செயல்பட்டு வந்த, ஏ பிரிவில் தேடப்படும் உள்ளூர் பயங்கரவாதிகளில் இவரும் ஒருவர். பல பயங்கரவாதச் சம்பவங்களில் இவருக்குத் தொடர்பிருப்பதாகக் குற்றச்சாட்டுகள் உள்ளன.

பாதுகாப்பு அமைப்புகள் சில மாதங்களாக இவரை தீவிரமாகத் தேடி வந்த நிலையில், இன்று என்கவுன்டர் செய்யப்பட்டுள்ளார்.

ஜம்மு - காஷ்மீரின் குல்காமில் கடந்த நவ. 11 ஆம் தேதி அக்ரானில் உள்ள சோதனைச் சாவடி மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து குல்காம் மாவட்டத்தில் உள்ள பல கிராமங்களில் பாதுகாப்புப் படையினர் அதிரடி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

புதன்கிழமை அதிகாலை பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த இடத்துக்கு அருகே வீரர்கள் நெருங்கிய போது, துப்பாக்கிச் சூடு சப்தம் கேட்டதைத் தொடர்ந்த, லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் தளபதி லத்தீஃப் பட் சுற்றி வளைக்ப்பட்டார்.

லத்தீஃப் பட், பாகிஸ்தானிலிருந்து இயங்கம் லஷ்கர்-இ-தொய்பா எனும் பயங்கரவாத அமைப்பின் தளபதியாக, ஏ வகை பிரிவைச் சேர்ந்த பயங்கரவாதி என அடையாளம் காணப்பட்டுள்ள 23 வயதான இளைஞர் என்றும், தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பயங்கரவாதிகளில் ஏ பிரிவில் உள்ளவர்கள், தீவிர தாக்குதல்கள் மற்றும் பயங்கரவாதச் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவது, மூளையாக இருப்பவர்களாவர், இதனால் அவர்கள் மிக முக்கியமான இலக்குகளாகக் கருதப்படுவர்.

கடைசி நிமிடம்

லத்தீஃப் ஒளிந்திருக்கும் இடத்துக்கு அருகே ராணுவ அதிகாரி ஒருவர், ஒலிப்பெருக்கி வாயிலாக எச்சரிக்கை விடுத்து, அவரை சரணடையுமாறு வலியுறுத்தினார்.

நாங்கள் இங்குதான் இருக்கிறோம் என்று அதிகாரி கூற, அதற்கு லத்தீஃப். “நான் அல்லாவை சந்திக்க விரும்புகிறேன். மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன் பதிலளித்துள்ளார்.

தொடர்ந்து மசூதி ஒன்றில் பதுங்கியிருந்த லத்தீஃப், ராணுவத்தினரால் என்கவுன்டர் செய்யப்பட்டார்.

summary

Who was the Lashkar terrorist Latif Butt, who was killed in an encounter? A shocking background

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.