FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

இந்தியாவில் ஹிந்துக்கள் விகிதம் குறையும்; முஸ்லிம்கள் அதிகரிப்பார்கள்! ஆய்வில் தகவல்!

இந்தியாவில் ஹிந்துக்கள் விகிதம் குறையும் என்று ஆய்வறிக்கையில் தகவல்...

53 வினாடிகள் முன்பு
கோப்புப்படம் - PTI
பகிர்:

இந்தியாவில் அடுத்த 50 ஆண்டுகளில் ஹிந்துக்கள் மக்கள்தொகை விகிதம் குறையும் என்றும், முஸ்லிம் மக்கள்தொகை விதிகம் அதிகரிக்கும் என்று ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“உலகில் உள்ள மதங்களின் எதிர்காலம்” என்ற தலைப்பில் அமெரிக்காவைச் சேர்ந்த பியூ ஆராய்ச்சி மையம் (Pew Research Center) ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதில், உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட மதமாக இருக்கும் கிறிஸ்துவத்தை பின்னுக்குத் தள்ளி, 2035ஆம் ஆண்டுக்குள் இஸ்லாம் மதம் முதலிடத்தை பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

மேலும், இந்தியாவில் 2020ஆம் ஆண்டு நிலவரப்படி, ஒட்டுமொத்த மக்கள்தொகையில் ஹிந்துக்கள் 79.4% இருக்கும் நிலையில், 2070-ல் அது 75.8 சதவிகிதகமாக குறையும் என்றும், முஸ்லிம் மக்கள்தொகை 15.2 சதவிகிதத்திலிருந்து 19.6 சதவிகிதமாக அதிகரிக்கும் என்றும் ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், உலகளவில் அதிக முஸ்லிம் மக்கள்தொகை கொண்ட இரண்டாவது பெரிய நாடாக இந்தியா (33.36 கோடி பேர்) மாறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ஹிந்து மக்கள்தொகை எதிர்காலம்

உலகில் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாகவுள்ள இந்தியாவில் 100 கோடிக்கும் அதிகமான ஹிந்துக்கள் வசித்து வருகின்றனர். இதேபோல், நேபாளம், வங்கதேசம் உள்ளிட்ட பிற நாடுகளில் 6.5 கோடி ஹிந்துக்கள் உள்ளனர்.

பியூ ஆராய்ச்சி மையத்தின் கணிப்புகளின்படி, வரும் ஆண்டுகளில் உலகெங்கிலும் உள்ள ஹிந்துக்களின் மொத்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், மற்ற மதங்களுடன் ஒப்பிடுகையில் ஹிந்துக்களின் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் குறைவாகவே இருக்கும் என்பதால், உலக மக்கள்தொகையில் ஹிந்துக்களின் பங்களிப்பு விகிதம் சற்று குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் 2020-ல் 30.40 லட்சமாக இருந்த ஹிந்துக்கள் மக்கள்தொகை, 2070-ல் 74.40 லட்சமாக இரட்டிப்பு வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2020 நிலவரப்படி, இந்தியாவில் 110 கோடியாகவும் உலகளவில் 120 கோடியாகவும் உள்ள ஹிந்துக்கள் மக்கள்தொகை, 2070-ல் இந்தியாவில் 130 கோடியாவும் உலகளவில் 140 கோடியாகவும் அதிகரிக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஹிந்துக்களின் குழந்தை பிறப்பு விகிதம், முஸ்லிம் மதத்தினரைவிட குறைவாக இருப்பதால், இந்திய மக்கள் தொகையில் முஸ்லிம்களின் விகிதம் அதிகரிக்கும் என்று ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

summary

The proportion of Hindus in India will decline, while that of Muslims will increase—according to a study!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.