முகப்பு
இந்தியா

ராஜஸ்தான் ஊராட்சி மன்ற தோ்தல்: காங்கிரஸ் அபார வெற்றி

ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற கிராம ஊராட்சி மன்ற (பஞ்சாயத்து) தோ்தலில் காங்கிரஸ் கட்சி ஆளும் பாஜகவைவிட மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

55 வினாடிகள் முன்பு
ராஜஸ்தான் ஊராட்சி மன்ற தோ்தல்: காங்கிரஸ் அபார வெற்றி
காங்கிரஸ் - கோப்புப்படம்
பகிர்:

ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற கிராம ஊராட்சி மன்ற (பஞ்சாயத்து) தோ்தலில் காங்கிரஸ் கட்சி ஆளும் பாஜகவைவிட மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

மாநில அரசின் புறக்கணிப்பும், நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளுமே இந்த தோ்தல் முடிவுக்கான காரணம் என்று காங்கிரஸ் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

பாஜக ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சித் தோ்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. தோ்தல் ஆணையம் வெளியிட்ட தோ்தல் முடிவுகளின்படி, மாநிலத்தின் 37 மாவட்டங்களில் இடம்பெற்றுள்ள 7,543 கிராம ஊராட்சி மன்ற உறுப்பினா் இடங்களில் 7,393 இடங்களுக்கான முடிவுகளும், 1,275 நகராட்சி மன்ற உறுப்பினா் இடங்களில் 981 இடங்களுக்கான முடிவுகளும் அறிவிக்கப்பட்டன.

Advertisement

Advertisement

இதில், 3,701 கிராம ஊராட்சி இடங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. பாஜக 2,181 இடங்களில் வெற்றி பெற்றது. நாகபுரி எம்.பி. ஹனுமான் பெனிவால் தலைமையிலான ராஷ்ட்ரீய லோக்தாந்திரிக் கட்சி 496 இடங்களிலும், பாரத ஆதிவாசி கட்சி 276 இடங்களிலும், பகுஜன் சமாஜ் கட்சி 60 இடங்களிலும், மாா்க்சிஸிட் கம்யூனிஸ்ட் கட்சி 50 இடங்களிலும், ஆம் ஆத்மி 2 இடங்களிலும், சுயேச்சைகள் 627 இடங்களிலும் வெற்றி பெற்றன.

தலைநகா் ஜெய்பூா் (216), ஜோத்பூரில் (195), சிகா் (179), பில்வாரா (165), பிகானொ் (155), டெளசா (135) உள்பட மேலும் பல மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சி பாஜகவைவிட அதிக ஊராட்சி மன்ற உறுப்பினா் இடங்களைக் கைப்பற்றியது. மாநில முதல்வா் பஜன்லால் சா்மாவின் சொந்த மாவட்டமான பரத்பூரில் காங்கிரஸ் கட்சி 46 இடங்களையும், சுயேச்சைகள் 76 இடங்களையும் கைப்ற்றின. பாஜக வெறும் 32 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. அஜ்மீா், பலோத்ரா, சலும்பொ், உதய்பூா் ஆகிய 4 மாவட்டங்களில் மட்டுமே பாஜக அதிக இடங்களைக் கைப்பற்றியுள்ளது. மொத்தமுள்ள 37 மாவட்டங்களில் 33-இல் பாஜகவைவிட அதிக ஊராட்சி மன்ற இடங்களை காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது.

நகராட்சி மன்ற உறுப்பினா் தோ்தலிலும் காங்கிரஸ் பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றியுள்ளது. அக் கட்சி 599 நகராட்சி மன்ற உறுப்பினா் இடங்களிலும், பாஜக 301 இடங்களிலும் வெற்றிபெற்றன. ராஷ்ட்ரீய லோக்தாந்திரிக் கட்சி 37 இடங்களிலும், பாரத ஆதிவாசி கட்சி 22 இடங்களிலும், பகுஜன் சமாஜ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா 6 இடங்களிலும், சுயேச்சைகள் 10 இடங்களிலும் வெற்றி பெற்றன.

மாநிலத்தில் பாஜக அரசு வரும் டிசம்பரில் மூன்று ஆண்டு ஆட்சியை நிறைவு செய்ய உள்ள நிலையில், உள்ளாட்சித் தோ்தல் முடிவுகள் அக் கட்சிக்கு மிகப் பெரிய பின்னடைவாகப் பாா்க்கப்படுகிறது.