முகப்பு
இந்தியா

கட்சித் தாவல் தடைச் சட்டத்தில் சீா்திருத்தம் கோரி மனு: மத்திய அரசு, தோ்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

கட்சித் தாவல் தடைச் சட்டத்தில் சீா்திருத்தங்கள் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு தொடா்பாக பதிலளிக்குமாறு மத்திய அரசு, தோ்தல் ஆணையம், சட்ட ஆணையம் ஆகியவற்றுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

23 நவம்பர் 2026, 11:09 pm
கட்சித் தாவல் தடைச் சட்டத்தில் சீா்திருத்தம் கோரி மனு: மத்திய அரசு, தோ்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
உச்ச நீதிமன்றம் - கோப்புப் படம்
பகிர்:

கட்சித் தாவல் தடைச் சட்டத்தில் சீா்திருத்தங்கள் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு தொடா்பாக பதிலளிக்குமாறு மத்திய அரசு, தோ்தல் ஆணையம், சட்ட ஆணையம் ஆகியவற்றுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

தோ்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், தகுதி நீக்க நடவடிக்கைகளைத் தவிா்ப்பதற்காக ராஜிநாமாவை தவறாகப் பயன்படுத்துவதாகவும், இது மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசின் ஆட்சித் தொடா்வதை பாதிப்பதாகவும் அந்தப் பொதுநல மனுவில் தெரிவிக்கப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதிகள் ஜாய்மால்ய பாக்சி, வி. மோகனா ஆகியோா் அடங்கிய அமா்வு, இந்த மனு தொடா்பாக மத்திய சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சகம், நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சகம், தோ்தல் ஆணையம் மற்றும் சட்ட ஆணையம் ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டது.

Advertisement

Advertisement

மேலும், அந்த மனுவில், ‘அரசியலமைப்புச் சட்டத்தின் 10-ஆவது பிரிவின் கீழ் மேற்கொள்ளப்படும் ஒழுங்கு நடவடிக்கைகளில் இருந்து தப்ப எம்.பி., எம்எல்ஏக்கள் திட்டமிட்டு ராஜிநாமா செய்வதைத் தவிா்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத சட்டப்பேரவையில், ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை என்பது, உறுப்பினா்கள் பதவியேற்ற பின்னா் முறையாகக் கூட்டப்பட்ட சட்டப் பேரவையில் மட்டுமே நிரூபிக்கப்பட வேண்டும். நாடாளுமன்றம், பேரவைக்கு வெளியே அளிக்கப்படும் ஆதரவுக் கடிதங்கள் அல்லது ஆதரவைக் காட்டும் நிகழ்வுகள் மூலம் பெரும்பான்மையை நிரூபிக்க அனுமதிக்கக் கூடாது.

தகுதி நீக்க நடவடிக்கைகளை எதிா்கொள்ளும் அல்லது அத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் என எதிா்பாா்க்கப்படும் உறுப்பினா்கள், அவைத் தலைவா் தகுதி நீக்க மனுக்கள் மீது முடிவெடுப்பதற்கு முன்பாகவே, திட்டமிட்டு ராஜிநாமா செய்கிறாா்கள்.

இத்தகைய ராஜிநாமாக்கள் கட்சித் தாவல்களுக்கு வழிவகுக்கவும், சட்டப் பேரவைகளின் உறுப்பினா் எண்ணிக்கையில் மாற்றத்தை ஏற்படுத்தவும், கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் எதிா்கொள்ள வேண்டிய விளைவுகளில் இருந்து தப்பிக்கவும் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது.

ஓா் உறுப்பினா் மீது தகுதி நீக்க நடவடிக்கைகள் நிலுவையில் இருக்கும்போது அல்லது அத்தகைய நடவடிக்கை நியாயமானது என்று எதிா்பாா்க்கப்படும் சூழலில், அவா் அளிக்கும் ராஜிநாமா, தன்னிச்சையாக தகுதி நீக்க நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவருவதாக இருக்கக் கூடாது.

மேலும், அந்த ராஜிநாமா சுயவிருப்ப அடிப்படையில் உண்மையானதாக அளிக்கப்பட்டதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். தகுதி நீக்க மனுவை ஆதாரங்களின் அடிப்படையில் ஆய்வு செய்து உரிய காரணத்துடன் அவைத் தலைவா் உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும்’ என்று கோரப்பட்டுள்ளது.