அதிமுகவிலிருந்து விலகிய 4 முன்னாள் எம்எல்ஏக்கள் மீதான தகுதி நீக்க விசாரணை தொடக்கம்!
தவெகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏக்கள் மீதான தகுதி நீக்க மனுக்கள் மீதான விசாரணை பற்றி..
அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த 4 முன்னாள் எம்எல்ஏக்களின் தகுதி நீக்க மனுக்கள் தொடர்பாக அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர் விசாரணை தொடங்கியுள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில், அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த நான்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக அளிக்கப்பட்டுள்ள தகுதி நீக்க மனுக்கள் தொடர்பான விசாரணை இன்று தொடங்கியது.
இந்த விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் இன்று விசாரணை நடத்தி வரும் நிலையில், அதிமுக தரப்பில் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, வழக்கறிஞர் எஸ். சுந்தரம் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் இன்பதுரை உள்ளிட்டோர் தலைமைச் செயலகத்திற்கு வருகை தந்தனர்.
Advertisement
Advertisement
மேலும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களான இசக்கி சுப்பையா, ஜெயக்குமார் உள்ளிட்டோரும் விசாரணை தொடர்பாக தலைமைச் செயலகத்திற்கு வந்தனர்.
நான்கு முன்னாள் எம்எல்ஏக்கள் மீதான தகுதி நீக்க மனுக்கள் தொடர்பான இந்த விசாரணையில், இரு தரப்பினரும் தங்களது வாதங்களை முன்வைக்க உள்ளதால் அரசியல் வட்டாரத்தில் இந்த விவகாரம் கவனம் பெற்றுள்ளது.