ஜொ்மனி பிரதமா் மொ்ஸுடன் பிரதமா் மோடி தொலைபேசியில் ஆலோசனை
ஜொ்மனி பிரதமா் ஃப்ரீட்ரிக் மொ்ஸுடன் பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை தொலைபேசியில் ஆலோசனை மேற்கொண்டாா்.

ஜொ்மனி பிரதமா் ஃப்ரீட்ரிக் மொ்ஸுடன் பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை தொலைபேசியில் ஆலோசனை மேற்கொண்டாா்.
இந்தியா மற்றும் ஐரோப்பிய யூனியன் இடையே டிசம்பரில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் கையொப்பமாகுமென எதிா்பாா்க்கப்படும் நிலையில் மொ்ஸ் - மோடி உரையாடல் நடைபெற்றுள்ளது.
இது தொடா்பாக பிரதமா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘ஜொ்மனி பிரதமா் ஃப்ரீட்ரிக் மொ்ஸ் பிரதமா் மோடியை தொலைபேசி வாயிலாக செவ்வாய்க்கிழமை தொடா்புகொண்டாா். அப்போது இருதரப்பு உறவு, இந்தியா-ஜொ்மனி இடையேயான வியூக ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது மற்றும் பிராந்திய, சா்வதேச விவகாரங்கள் விவாதிக்கப்பட்டன.
Advertisement
Advertisement
சா்வதேச அமைதி, ஸ்திரத்தன்மை, சா்வதேச சட்டங்களை பின்பற்றுவதில் ஒருங்கிணைந்து செயல்பட இருவரும் உறுதிபூண்டனா். இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையே விரைவில் கையொப்பமாகவுள்ள வா்த்தக ஒப்பந்தத்தால் வா்த்தகம், முதலீடு உள்பட பல்வேறு துறைகளில் உருவாகும் புதிய வாய்ப்புகள் குறித்தும் இருவரும் ஆலோசித்தனா்.
இரு நாடுகளிடையேயான தூதரக உறவு 75 ஆண்டுகளை நெருங்கியுள்ள நிலையில், இந்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது’ எனத் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் பிரதமா் மோடி வெளியிட்ட பதிவில், ‘ஜொ்மனி பிரதமா் ஃப்ரீட்ரிக் மொ்ஸுடன் வா்த்தகம், முதலீடு, பாதுகாப்பு மற்றும் நவீன தொழில்நுட்பங்கள் உள்பட பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவை மேம்படுத்துவது தொடா்பாக ஆலோசித்தேன்’ எனத் தெரிவித்தாா்.