காசியில் 11 லட்சம் தீபங்கள், 2100 டிரோன்கள் மூலம் ஒளிர்ந்த கங்கைக்கரை!
கங்கை நதிக்கரையோரம் 11 லட்சம் தீபங்கள் ஏற்றப்பட்டது குறித்து...

காசியில் தேவ தீபாவளி திருவிழாவையொட்டி கங்கை நதிக்கரையோரம் 11 லட்சம் தீபங்கள் ஏற்றப்பட்டன. இதுமட்டுமின்றி 2100 டிரோன்கள் மூலம் வானில் வர்ணஜாலம் நிகழ்த்தப்பட்டது.
கடவுள், இறை மொழிகள் வானில் டிரோன் காட்சிகளாக இடம்பெற்றன. இதனால் கங்கைக் கரை முழுவதும் ஒளி வெள்ளத்தில் மிதந்தது.
உத்தரப் பிரதேச மாநிலம் காசியில் கார்த்திகை பௌர்ணமி நாளான இன்று (நவ. 24) தேவ தீபாவளி எனப்படும் ஒளித் திருவிழா கொண்டாடப்பட்டது. கார்த்திகை பெளர்ணமி நாளான இன்று தேவர்கள் பூமிக்கு வந்து கங்கையில் நீராடுவதாக நம்பப்படுகிறது.
Advertisement
Advertisement
இதனால் கங்கை நதிக்கரையோரம் தீபங்கள் ஏற்றி ஆண்டுதோறும் இந்நாளில் சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு கங்கை நதிக்கரையோரம் சூரியன் மறைந்த பிறகு 11 லட்சம் தீபங்கள் ஏற்றப்பட்டன.
மாலை முதலே மண் அகல் விளக்குகளை அடுக்கும் பணி நடைபெற்றது. அதில் எண்ணெய்த் திரியிட்டு தீபம் ஏற்றி மாலையில் 11 லட்சம் தீபங்களும் ஏற்றப்பட்டன.
இதுமட்டுமின்றி வானில் வர்ணஜாலத்தை ஏற்படுத்தும் வகையில் 2,100 டிரோன்கள் மூலம் கடவுளின் உருவங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
இதனைத் தொடர்ந்து தசாஷ்வமேத் காட் உள்ளிட்ட இடங்களில் கங்கா ஆரத்தி கொடுக்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
இதனைக் காண அண்டை மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாட்டில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் காசியில் குவிந்தனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.