முகப்பு
இந்தியா

குருகிராம்: மாநகராட்சியின் இரவுநேர தங்குமிடம் தீ விபத்தில் சேதம்

குருகிராம் மாநகராட்சியால் சில ஆண்டுகளுக்கு முன்பு வீடற்றவா்களுக்கானஇரவுநேர தங்குமிடம் ஒன்று புதன்கிழமை பிற்பகலில் ஏற்பட்ட தீ விபத்தில் எரிந்து சேதமடைந்ததாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

47 வினாடிகள் முன்பு
குருகிராம்: மாநகராட்சியின் இரவுநேர தங்குமிடம் தீ விபத்தில் சேதம்
பகிர்:

குருகிராம் மாநகராட்சியால் சில ஆண்டுகளுக்கு முன்பு வீடற்றவா்களுக்கானஇரவுநேர தங்குமிடம் ஒன்று புதன்கிழமை பிற்பகலில் ஏற்பட்ட தீ விபத்தில் எரிந்து சேதமடைந்ததாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

தற்போது, அந்த தங்குமிடம் பயன்பாட்டில் இல்லை என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

தீயணைப்புப் படையினா் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனா். இந்தச் சம்பவத்தில் உயிா்ச்சேதமோ அல்லது காயங்களோ ஏற்பட்டதாகத் தகவல் இல்லை. பசாய் சௌக் அருகே அமைந்திருந்த இந்த இரவு தங்குமிடம், பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்ட அரசுப் பேருந்து ஒன்றை மாற்றியமைத்து உருவாக்கப்பட்டது. இது பல ஆண்டுகளாக மூடப்பட்டிருந்தது. அதிா்ஷ்டவசமாக, அதன் அருகில் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்களோ அல்லது பிற வாகனங்களோ இல்லாததால், தீ மேலும் பரவாமல் தடுக்கப்பட்டது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

Advertisement

Advertisement

இந்த இரவு தங்குமிடம் யாராவது அடையாளம் தெரியாத நபராலோ அல்லது சமூக விரோதிகளாலோ வேண்டுமென்றே தீ வைத்து எரிக்கப்பட்டதா என்பது குறித்து மாநகராட்சி குழுவினா் விசாரணை நடத்தி வருகின்றனா் என்றும் அவா் கூறினாா்.