மகளிருக்கு ரூ.40,000, மெட்ரோ ரயிலில் இலவசம்! இன்று வெளியாகிறதா சமாஜ்வாதி வாக்குறுதிகள்!
மகளிருக்கு ரூ.40,000, மெட்ரோ ரயிலில் இலவசம் என்பது உள்ளிட்ட சமாஜ்வாதி வாக்குறுதிகள்

2027-ஆம் ஆண்டு உத்தரப்பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அரசியலமைப்புச் சட்ட நாளை முன்னிட், சமாஜ்வாதி கட்சி சார்பில் இன்று தேர்தல் வாக்குறுதிகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களை மையமாகக் கொண்டு இந்த தேர்தல் வாக்குறுதிகள் தயாரிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
அதில், பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.40 ஆயிரம் ஓய்வூதியம், ஜாதிவாரி கணக்கெடுப்பு, இலவச மின்சாரம், விவசாய கடன்கள் தள்ளுபடி, மாணவர்களுக்கு மெட்ரோ ரயிலில் இலவச பயணம் உள்ளிட்ட அறிவிப்புகள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisement
Advertisement
நவ. 26ஆம் தேதி, சமாஜ்வாதி கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என்று அக்கட்சியின் தலைவர் கடந்த மாதமே எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். இதன் அடிப்படையில் இன்று தேர்தல் வாக்குறுதிகள் வெளியாகலாம் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில், அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் அறிக்கையை வெளியிடும் முதல் கட்சியாக சமாஜ்வாதி இருக்கும்.