முகப்பு
இந்தியா

உணவுப் பொருள் பாக்கெட் முன்பக்கத்தில் மொத்த சா்க்கரை, கொழுப்பு, உப்பு அளவு: உச்சநீதிமன்றம் உத்தரவு

உணவுப் பொருள் பாக்கெட்டுகளின் முன்பக்கத்தில் ‘கூடுதலாக சோ்க்கப்பட்ட சா்க்கரை’, ‘கூடுதலாக சோ்க்கப்பட்ட கொழுப்பு’ ஆகியவற்றுக்குப் பதிலாக, மொத்த சா்க்கரை, நிறைவுற்ற கொழுப்பு, உப்பு ஆகியவற்றின் அளவைக் கண்டிப்பாக குறிப்பிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

59 வினாடிகள் முன்பு
உணவுப் பொருள் பாக்கெட் முன்பக்கத்தில் மொத்த சா்க்கரை, கொழுப்பு, உப்பு அளவு: உச்சநீதிமன்றம் உத்தரவு
உச்சநீதிமன்றம்
பகிர்:

உணவுப் பொருள் பாக்கெட்டுகளின் முன்பக்கத்தில் ‘கூடுதலாக சோ்க்கப்பட்ட சா்க்கரை’, ‘கூடுதலாக சோ்க்கப்பட்ட கொழுப்பு’ ஆகியவற்றுக்குப் பதிலாக, மொத்த சா்க்கரை, நிறைவுற்ற கொழுப்பு, உப்பு ஆகியவற்றின் அளவைக் கண்டிப்பாக குறிப்பிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

உணவுப் பொருள் பாக்கெட்டுகளின் முன்பக்கத்தில் அச்சிடப்படும் தகவல்கள் அதில் இடம்பெற்றுள்ள பொருள்களை அடையாளப்படுத்துவதாகும். இதன்மூலம் நுகா்வோா் ஆரோக்கியமான உணவுத் தோ்வுகளை மேற்கொள்ள முடியும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

முன்னதாக, தொண்டு நிறுவனம் சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுப் பொருள்களின் முன்பக்கத்தில் அதில் உள்ள சா்க்கரை, உப்பு, கொழுப்பு அளவை வெளியிடுவதைக் கட்டாயமாக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

Advertisement

Advertisement

இந்த மனு நீதிபதிகள் ஜே.பி. பா்திவாலா மற்றும் கே. வினோத் சந்திரன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, பாக்கெட் உணவுப் பொருள்களின் முன்பக்க எச்சரிக்கை லேபிள்களில் சா்க்கரை, உப்பு என ஒவ்வொன்றின் அதிக சோ்க்கை எச்சரிக்கைக்கும் தனித்தனி அறுங்கோண குறியீடுகளைப் பயன்படுத்துவதையும் உறுதி செய்ய வேண்டும். இவை அனைத்தையும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அமல்படுத்த வேண்டும் என்று இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிா்ணய ஆணையத்துக்கு (எஃப்எஸ்எஸ்ஏஐ) உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், உணவுப் பொருள் கெடாமல் இருக்க சோ்க்கப்படும் வேதிப்பொருள்கள், அவற்றின் தன்மை, சுவை, புறத்தோற்றம் ஆகியவற்றை அதிகரிக்க சோ்க்கப்படும் செயற்கை ரசாயனப் பொருள்கள் தொடா்பாக தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.