முகப்பு

ஐஐடியின் வித்தியாசமான வினாத்தாள்! மாணவர்களே கேள்வி எழுதி பதில் அளிக்க வேண்டும்!

மாணவர்களே கேள்விகளை தயாரித்து பதில் அளிக்க வேண்டும் என்ற ஐஐடி வினாத்தாள் இணையத்தில் வைரலாவது குறித்து...

ஐஐடியின் வித்தியாசமான வினாத்தாள்! மாணவர்களே கேள்வி எழுதி பதில் அளிக்க வேண்டும்!
ஐஐடி வினாத்தாள் (வலது) - எக்ஸ்
பகிர்:

கேள்விகளை மாணவர்களே தயாரித்து பதில் அளிக்க வேண்டும் என்ற கோவா ஐஐடியின் வினாத்தாள் இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

இறுதி செமஸ்டரில் எடுக்கப்பட்ட பாடங்களில் தங்களுக்குப் புரிந்தவற்றை கேள்வியாக எழுதி அதற்கு விரிவான பதில் அளிக்க வேண்டும் என்று வினாத்தாளில் கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

பாடத்தை எந்த அளவுக்கு மாணவர்கள் புரிந்துகொண்டுள்ளனர் என்பதை சோதிக்கும் வகையில் இக்கேள்வி கேட்கப்பட்டுள்ளது. பாடத்தை புரிந்து கேள்விகளை உருவாக்குவதே உண்மையான திறனைச் சோதிக்கும் வழி எனப் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

கோவா ஐஐடியில் அலனாக் சர்க்யூட் பாடப்பிரிவின் இறுதி செமஸ்டர் மாணவர்களுக்கு கொடுக்கப்பட்ட வினாத்தாள் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. வினாத்தாளின் மொத்த மதிப்பெண்கள் 70.

வினாத்தாளில் ஒரே ஒரு கேள்விதான் கேட்கப்பட்டுள்ளது. அதாவது, விரிவுரையாளர் எடுத்த பாடத்தில் உங்களுக்கு புரிந்தவற்றை கேள்விகளாக எழுதி அதற்கு விரிவான பதில் அளிக்க வேண்டும் எனக் கேட்கப்பட்டுள்ளது. இதற்கு 60 மதிப்பெண்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

2 மணி நேரத்தில் பதில் அளிக்க வேண்டும் என்றும் சக மாணவர்களுடன் ஆலோசித்து பதில் எழுதக் கூடாது எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

கேள்விகளிலும் பதில்களிலும் ஒற்றுமை இருந்தால் மதிப்பெண்கள் குறைக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

பாடத்தை மாணவர்கள் எந்த அளவுக்கு புரிந்துகொண்டுள்ளனர் என்பதை பரிசோதிப்பதற்காக இந்த வினாத்தாள் தயாரிக்கப்பட்டுள்ளதாக ஐஐடி கோவா தெரிவித்துள்ளது.

கோவா ஐஐடியின் வினாத்தாள் - எக்ஸ்
summary

viral exam paper from IIT Goa asks students to set their own questions and answer them

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.