யுபிஐ மூலமாக பிஎஃப் பணம் எடுக்கும் வசதி எப்போது? குறைந்தபட்ச தொகை இதுதான்!
யுபிஐ மூலமாக பிஎஃப் பணம் எடுக்கும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது பற்றி...

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (பிஎஃப்) கணக்கில் இருந்து யுபிஐ மூலமாக பணம் எடுக்கும் வசதி டிசம்பர் மாத இறுதியில் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பானது, பிஎஃப் கணக்கு வைத்திருக்கும் ஒருவர், தங்கள் கணக்கில் உள்ள தொகையை அவசரத் தேவைக்காக எடுக்க வழிவகை உள்ளது. இதற்காக ஆன்லைன் மூலமாகவோ நேரிலோ விண்ணப்பித்தால், அதிகாரிகள் அதனை சரிபார்த்து ஒப்புதல் அளித்து பின்னர் நிதி விடுவிக்கப்படும்.
இந்நிலையில் பிஎஃப் கணக்கு வைத்திருப்போர் அவசரத் தேவைக்காக எளிதாக, உடனடியாக பணம் எடுக்கும் வகையில் யுபிஐ மூலமாக பணபரிமாற்றத்தை இபிஎஃப்ஓ அறிமுகப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது .
Advertisement
Advertisement
அதன்படி அடுத்த மாதம் (டிசம்பர்) மாத இறுதியில் இந்த நடைமுறை அறிமுகப்படுத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல பிஎஃப் கணக்கில் அடிக்கடி குறைந்தபட்ச தொகை எடுப்பதைத் தவிர்க்கும்பொருட்டு குறைந்தபட்ச தொகையாக ரூ. 1,000 நிர்ணயிக்கப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாரத ஸ்டேட் வங்கி மற்றும் இந்திய தேசிய கொடுப்பனவுக் கழகம் (என்பிசிஐ) ஆகியவற்றின் டிஜிட்டல் உதவியுடன் இபிஎஃப்ஓ இயங்கி வருகிறது.
இந்த புதிய நடைமுறையின் மூலமாக, உங்கள் பிஎஃப் கணக்கில் உள்ள பணம், 'பிம்' (BHIM) செயலி மூலமாக உங்களுடைய வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.