முகப்பு

1963 முதல் 2026 வரை... நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்ட முக்கிய மசோதாக்கள்!

நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்ட முக்கிய மசோதாக்கள் குறித்து...

1963 முதல் 2026 வரை... நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்ட முக்கிய மசோதாக்கள்!
நாடாளுமன்றம் - கோப்புப் படம்
பகிர்:

நாடாளுமன்றத்தில் கடந்த ஏப்ரல் மாதம் கொண்டுவரப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதா தோல்வியடைந்த நிலையில், அடுத்த வாரம் நடைபெறும் சிறப்புக் கூட்டத் தொடரில் தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேற்றப்பட வாய்ப்பிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்றத்தில் 1963 முதல் 2026 வரையில் 12 முக்கிய மசோதாக்கள் தோற்கடிக்கப்பட்டதாக முன்னாள்மக்களவை பொதுச் செயலாளர் பி.டீ.டி. அச்சாரி எழுதிய புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

1963 முதல் 2026 வரையில் நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்ட மசோதாக்கள்

Advertisement

Advertisement

17-வது திருத்த மசோதா (1963): நிலச் சீர்திருத்தச் சட்டங்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட மசோதா, ஏப்ரல் 1964-ல் மக்களவையில் போதிய பெரும்பான்மை கிடைக்காததால் தோல்வியடைந்தது.

19-வது திருத்த மசோதா (1966): புதிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை உருவாக்குவதற்கான நாடாளுமன்ற அதிகாரங்களைத் தெளிவுபடுத்த கொண்டுவரப்பட்ட மசோதா, மே 1966-ல் மக்களவையில் தோல்வியடைந்தது.

24-வது திருத்த மசோதா (1970): சுதந்திரத்துக்குப் பிறகு சமஸ்தானங்களின் முன்னாள் ஆட்சியாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த அரசு மானியம் (Privy Purses) மற்றும் சிறப்புச் சலுகைகளை ரத்து செய்வதற்காகக் கொண்டுவரப்பட்ட இந்த மசோதா, மக்களவையில் நிறைவேற்றப்பட்ட போதிலும், மாநிலங்களவையில் தோல்வியடைந்தது.

46-வது திருத்த மசோதா (1978). பட்டியலினத்தவர், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினர் ஆணையங்களுக்கு அரசியலமைப்பு அங்கீகாரம் வழங்கும் இந்த மசோதா, 1979 மே மாதத்தில் மக்களவையில் தோல்வியடைந்தது.

47-வது திருத்த மசோதா (1982). வடகிழக்கு மாநிலங்களில் வசிக்கும் பழங்குடியினருக்கு சட்டப்பேரவை, மக்களவையில் இடஒதுக்கீடு வழங்கும் மசோதா, 1984-ல் மக்களவையில் தோற்கடிக்கப்பட்டது.

64 மற்றும் 65-வது திருத்த மசோதாக்கள் (1989): பஞ்சாயத்து ராஜ் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு அரசியலமைப்பு அங்கீகாரம் வழங்குவதற்காகக் கொண்டுவரப்பட்ட இவ்விரு மசோதாக்களும் மக்களவையில் வெற்றி பெற்றன. இருப்பினும், மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லாததால் தோல்வியடைந்தன.

64-வது திருத்த மசோதா (1990): பஞ்சாப் மாநிலத்தில் 1987 மே 11 ஆம் தேதியில் அமல்படுத்தப்பட்ட 3 ஆண்டு கால குடியரசுத் தலைவர் ஆட்சியை, கூடுதலாக 6 மாதங்கள் சேர்த்து 3 ஆண்டுகள் மற்றும் 6 மாதங்களாக நீட்டிக்க அரசியலமைப்பின் 356-வது பிரிவில் திருத்தம் செய்ய மசோதா கொண்டுவரப்பட்டது. மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட இம்மசோதா, பெரும்பான்மை கிடைக்காததால் மக்களவையில் தோல்வியடைந்தது.

75-வது திருத்த மசோதா (1990): பஞ்சாப் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை 4 ஆண்டுகளாக நீட்டிக்கக் கோரிய மசோதா, 1990 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட நிலையில், மக்களவையில் தோல்வியடைந்தது.

116-வது திருத்த மசோதா (2011): லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா அமைப்புகளுக்கு அரசியலமைப்பு அங்கீகாரம் வழங்குவதற்காகக் கொண்டுவரப்பட்ட இந்த மசோதா, மக்களவையில் பெரும்பான்மை ஆதரவு கிடைக்காததால் தோல்வியடைந்தது.

131-வது திருத்த மசோதா (2026): மகளிர் இடஒதுகீட்டுடன் சேர்த்து தொகுதி மறுவரையறைக்காகக் கொண்டுவரப்பட்ட இந்த மசோதா, 2026 ஏப்ரல் மாதம் மக்களவையில் பெரும்பான்மை கிடைக்காததால் தோல்வியடைந்தது.

summary

Amendment bills defeated in Parliament

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.