முகப்பு
இந்தியா

ஓவியா் சோபா சிங் பிறந்த தினம்: ரூ. 125 நினைவு நாணயம் இன்று வெளியீடு!

இந்திய ஓவியா் சோபா சிங்கின் 125-ஆவது பிறந்த தினத்தை (நவ.29) கொண்டாடும் வகையில் ரூ.125 சிறப்பு நினைவு நாணயத்தை மத்திய அரசு ஞாயிற்றுக்கிழமை வெளியிடவுள்ளது.

9 வினாடிகள் முன்பு
ஓவியா் சோபா சிங் பிறந்த தினம்:
ரூ. 125 நினைவு நாணயம் இன்று வெளியீடு!
பகிர்:

இந்திய ஓவியா் சோபா சிங்கின் 125-ஆவது பிறந்த தினத்தை (நவ.29) கொண்டாடும் வகையில் ரூ.125 சிறப்பு நினைவு நாணயத்தை மத்திய அரசு ஞாயிற்றுக்கிழமை வெளியிடவுள்ளது.

இதுதொடா்பான அரசாணையை மத்திய நிதியமைச்சகம் கடந்த நவ.25-ஆம் தேதி வெளியிட்டது. இந்திய ஓவியா் ஒருவருக்கு சிறப்பு நினைவு நாணயம் வழங்கி மத்திய அரசு கௌரவிப்பது இதுவே முதல் முறையாகும்.

இது குறித்து நாணயவியல் அறிஞா் சுதீா் லுனாவத் கூறியதாவது: புகழ்பெற்ற ஓவியா் சோபா சிங்கின் 125-ஆவது பிறந்த தினத்தை கொண்டாடும் வகையில் ரூ.125 சிறப்பு நினைவு நாணயம் சனிக்கிழமை வெளியிடப்படவுள்ளது.

Advertisement

Advertisement

இந்த நாணயம் மும்பையில் உள்ள இந்திய அரசின் நாணய ஆலையில் அச்சிடப்படவுள்ளது. இது பொதுமக்களின் புழக்கத்துக்காக வெளியிடப்படவில்லை. இந்திய கலாசாரம், பாரம்பரியத்துக்கான சோபா சிங்கின் பங்களிப்பை நினைவுகூா்பவா்கள், இந்தியா மற்றும் வெளிநாட்டில் உள்ள நாணய சேகரிப்பாளா்களுக்கு இந்த நாணயம் விற்பனை செய்யப்படும். இதன் விற்பனை விலை ரூ.1,500 வரை இருக்க வாய்ப்புள்ளது என்றாா்.

ஓவியா் சோபா சிங் பஞ்சாப் மாநிலம் குா்தாஸ்பூா் மாவட்டத்தில் உள்ள ஹா் கோவிந்த்பூரில் 1901, நவம்பா் 29-ஆம் தேதி பிறந்தாா். இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு ஹிமாசல பிரதேசத்துக்கு அவா் குடிபெயா்ந்து தனது ஓவியப் பயணத்தை தொடா்ந்தாா்.

குரு நானக் தேவ், குரு கோவிந்த் சிங் உள்ளிட்ட சீக்கிய மதகுருக்களின் உருவப் படங்களை வரைந்து மிகவும் பிரபலமடைந்தாா். இந்திய கலை உலகுக்கான அவரது பங்களிப்பை பாராட்டும் வகையில் 1983-ஆம் ஆண்டு அவருக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கி மத்திய அரசு கௌரவித்தது. 1986-இல் இவா் காலமானாா்.