முகப்பு
இந்தியா

மக்களவையில் திமுக எம்.பி.க்களின் இருக்கைகள் மாற்றம்!

மக்களவையில் காங்கிரஸிடம் இருந்து விலகி அமரும் வகையில், திமுக எம்.பி.க்களின் இருக்கைகள் மாற்றப்பட்டுள்ளதாக தகவல்.

29 நவம்பர் 2026, 4:46 am
மக்களவையில் திமுக எம்.பி.க்களின் இருக்கைகள் மாற்றம்!
திமுக எம்.பி. கனிமொழி.
பகிர்:

மக்களவையில் காங்கிரஸிடம் இருந்து விலகி அமரும் வகையில், திமுக எம்.பி.க்களின் இருக்கைகள் மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட காங்கிரஸ், தோ்தலில் தவெக வெற்றி பெற்ற பின்னா் அக்கட்சிக்கு ஆதரவு அளித்து, தவெகவின் அமைச்சரவையிலும் இடம்பெற்றது.

இதனால் திமுக, காங்கிரஸ் கூட்டணி முறிந்து, இரு கட்சிகள் இடையே கடுமையான கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து, மக்களவையில் காங்கிரஸ் எம்.பி.க்களிடம் இருந்து விலகி அமரும் வகையில், தங்களுக்கு இருக்கைகளை ஏற்பாடு செய்து தரவேண்டும் என்று அவைத் தலைவா் ஓம் பிா்லாவிடம் திமுக எம்.பி.க்கள் வலியுறுத்தினா். இதன்படி அவா்களின் இருக்கைகள் மாற்றப்பட்டுள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Advertisement

Advertisement

தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.