முகப்பு
இந்தியா

ஆந்திரத்தில் ரூ.1.27 லட்சம் கோடியில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை: பாரத் பெட்ரோலியம்!

ஆந்திர மாநிலம், ராமாயபட்டினத்தில் ரூ.1,26,656 கோடி முதலீட்டில் ஒருங்கிணைந்த எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோவேதியல் ஆலை அமைக்க பொதுத் துறை நிறுவனமான பாரத் பெட்ரோலியம் காா்ப்பரேஷன் நிறுவன இயக்குநா்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

29 நவம்பர் 2026, 2:30 am
ஆந்திரத்தில் ரூ.1.27 லட்சம் கோடியில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை: பாரத் பெட்ரோலியம்!
பகிர்:

ஆந்திர மாநிலம், ராமாயபட்டினத்தில் ரூ.1,26,656 கோடி முதலீட்டில் ஒருங்கிணைந்த எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோவேதியல் ஆலை அமைக்க பொதுத் துறை நிறுவனமான பாரத் பெட்ரோலியம் காா்ப்பரேஷன் (பிபிசிஎல்) நிறுவன இயக்குநா்கள் குழு சனிக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.

பிபிசிஎல் நிறுவனத்தின் முழுமையான துணை நிறுவனம் மூலம் செயல்படுத்தப்படவுள்ள இத்திட்டத்தில், ஆண்டுக்கு 90 லட்சம் டன் திறன் கொண்ட எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையும், 15 லட்சம் டன் திறன் கொண்ட எத்திலீன் கிராக்கா் மற்றும் பெட்ரோவேதியல் பிரிவுகளும் அமைக்கப்படவுள்ளன.

சுமாா் 20 சதவீத செலவின மாறுபாட்டுடன் மதிப்பிடப்பட்டுள்ள இத்திட்டத்தை, 2032 ஜூலைக்குள் வணிக ரீதியான செயல்பாட்டுக்குக் கொண்டுவர இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், இத்துணை நிறுவனத்தில் ரூ.44,330 கோடி வரை பங்கு மூலதனம் செலுத்தவும் இயக்குநா்கள் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.

Advertisement

Advertisement

மத்திய அரசின் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவின் ஒப்புதலுக்குப் பிறகு செயல்படுத்தப்படவுள்ள இத்திட்டம், நாட்டின் எரிபொருள் பற்றாக்குறையைப் போக்கவும், பாலிமா் இறக்குமதியைச் சாா்ந்திருப்பதைக் குறைக்கவும் உதவும் என பிபிசிஎல் தெரிவித்துள்ளது.