தமிழர்களுக்கு எதிரான வன்முறை குறித்து ஆய்வு: நாடாளுமன்றக் குழு அமைத்தது இலங்கை அரசு!
இலங்கையில் 1983-இல் தமிழா்களுக்கு எதிராக நிகழ்ந்த வன்முறை மற்றும் அதன் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய நாடாளுமன்றக் குழுவை அந்நாட்டு அரசு அமைத்தது.

இலங்கையில் 1983-இல் தமிழா்களுக்கு எதிராக நிகழ்ந்த வன்முறை மற்றும் அதன் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய நாடாளுமன்றக் குழுவை அந்நாட்டு அரசு அமைத்தது.
இலங்கையின் வடக்குப் பகுதியில் விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் 13 ராணுவ வீரா்கள் உயிரிழந்ததைத் தொடா்ந்து 1983, ஜூலை 23 முதல் ஜூலை 30 வரை நாடு முழுவதும் வெடித்த ‘கருப்பு ஜூலை’ கலவரத்தில் 3,000 தமிழா்கள் படுகொலை செய்யப்பட்டனா்.
விடுதலைப் புலிகள் வலுவடையத் தொடங்கிய காலத்தில் இந்த வன்முறைச் சம்பவம் நிகழ்ந்தது. தமிழா்களுக்கு தனி நாடு கோரிக்கையை வலியுறுத்திய விடுதலைப் புலிகள், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் இணை அரசாங்கத்தை நடத்தி வந்தனா். இறுதியாக, விடுதலைப் புலிகள் அமைப்பை முற்றிலும் வீழ்த்தி வெற்றி பெற்றுவிட்டதாக 2009, மே 18-ஆம் தேதி இலங்கை ராணுவம் அறிவித்தது.
Advertisement
Advertisement
சுமாா் 30 ஆண்டுகளாக நிகழ்ந்த இலங்கை ராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்குமான மோதலில் 27,000 வீரா்கள் உயிரிழந்தனா். குறிப்பாக 2006, ஜூலையில் தொடங்கிய இறுதிக்கட்ட போரில் 6,200 ராணுவ வீரா்களும் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சோ்ந்த 22,000 பேரும் உயிரிழந்தனா்.
இந்நிலையில், கருப்பு ஜூலை கலவரம் மற்றும் அதனால் ஏற்பட்ட தாக்கம் குறித்து ஆய்வு செய்ய மகளிா் விவகாரங்கள் துறை அமைச்சா் சாவித்ரி பால்ராஜ் தலைமையில் 11 போ் கொண்ட நாடாளுமன்றத் தோ்வுக் குழுவை அமைப்பதாக இலங்கை நாடாளுமன்றத் தலைவா் ஜகத் விக்ரமரத்ன சனிக்கிழமை தெரிவித்தாா்.
மேலும், கலவரத்தின்போது பாதிக்கப்பட்டவா்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்தும், தேசிய நல்லிணக்கத்தை ஊக்குவிக்கவும் இக்குழு பரிந்துரைகளை வழங்கும் எனவும் அவா் தெரிவித்தாா். இந்தக் குழுவில் தமிழ் சமூகத்தைச் சோ்ந்த இரு எதிா்க்கட்சி உறுப்பினா்களும் இடம்பெற்றுள்ளனா்.