வெற்றிவேல் முருகனுக்கு ஆரோகரா! அமித் ஷா பதிவு
திருப்பரங்குன்றம் மலைத் தூணில் தீபம் ஏற்றப்பட்ட விடியோவை தனது எக்ஸ் தளத்தில் அமித் ஷா பதிவிட்டிருப்பது பற்றி...

திருப்பரங்குன்றம் மலைத் தூணில் தீபம் ஏற்றப்பட்ட விடியோவை தனது எக்ஸ் தளத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பதிவிட்டுள்ளார்.
அதில், வெற்றிவேல் முருகனுக்கு ஆரோகரா! முருகப்பெருமான் தனது வெற்றிவேல் கொண்டு தீய சக்திகளை அழிக்கிறார், கார்த்திகை தீபத்தின் ஒளி எல்லா இருளையும் அகற்றுகிறது. முருகப்பெருமான் அனைவருக்கும் மகிழ்ச்சி, நல்வாழ்வு மற்றும் செழிப்பையும், அதர்மத்தை அழித்து ஞானத்தையும் அருளட்டும் என்று தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள தூணில், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, சனிக்கிழமை மாலை 5 மணியளவில் தீபம் ஏற்றப்பட்டது. கோயில் ஸ்தானிக பட்டர்களும், உச்ச நீதிமன்றம் நியமித்த ஓய்வுபெற்ற நீதிபதிகள் எஸ். வைத்தியநாதன், பி. பார்த்திபன் ஆகியோரும் சூடத்தை ஏற்றி பூஜை செய்த பிறகு தீபத்தை ஏற்றினர்.
Advertisement
Advertisement
ஓய்வுபெற்ற நீதிபதிகள் உள்பட வழிகாட்டுதல் குழுவினர் முன்னிலையில், சிஆர்பிஎஃப் வீரர்களின் பாதுகாப்புடன் தீபம் ஏற்றப்பட்டுள்ளது. மலையடிவாரத்தில் நின்றிருந்த ஏராளமான பக்தர்கள், தீபத்தைப் பார்த்து பக்தி பரவசத்துடன் முருகனுக்கு அரோகரா என்று முழக்கமிட்டனர். சங்கொலி, கைலாய வாத்தியங்கள் ஓயாமல் ஒலித்தன.
மேலும் ஆங்காங்கே வாண வேடிக்கைகள், அதிர்வேட்டுகள் முழங்கின என்பது குறிப்பிடத்தக்கது.