நடுவானில் கத்திக்குத்து சம்பவம்! சௌதியில் இருந்து இந்திய விமானி அபுதாபிக்கு இடமாற்றம்!
தாக்குதலில் படுகாயமடைந்த இந்திய விமானி சௌதி அரேபியாவில் இருந்து அபுதாபிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது குறித்து...
துபையில் இருந்து இஸ்ரேல் சென்ற விமானத்தில் சக விமானியால் கத்தியால் குத்தப்பட்ட இந்திய விமானி ஸ்மித் மச்சார் மேல் சிகிச்சைக்காக அபுதாபிக்கு இடமாற்றம் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் துபை விமான நிலையத்தில் இருந்து இஸ்ரேலுக்கு நேற்று (செப். 30) 174 பயணிகளுடன் சென்ற ஃபிளைதுபை விமானம் நடுவானில் பறந்தபோது அதை இயக்கிய இந்திய விமானி ஸ்மித் மச்சாரை ஓமன் நாட்டைச் சேர்ந்த சக விமானி கத்தியால் குத்திக்கொலை செய்ய முயன்றார்.
அப்போது, வெட்டுக்காயங்களுடன் அவரை எதிர்த்து சண்டையிட்ட ஸ்மித் மச்சார் உரிய நேரத்தில் விமானி அறையின் கதவைத் திறந்ததால் தாக்குதல் நடத்திய விமானியை பயணிகள் மற்றும் பணியாளர்கள் இணைந்து சிறைப்பிடித்தனர்.
Advertisement
Advertisement
உடனடியாக, வேறு இரண்டு விமானிகள் அந்த விமானத்தைத் தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து சௌதி அரேபியாவின் தபூக் விமான நிலையத்தில் பத்திரமாகத் தரையிறக்கினர்.
இதையடுத்து, சௌதி அரேபியாவில் சிகிச்சை பெற்று வந்த இந்திய விமானி ஸ்மித் மச்சாரின் உடல்நிலை சீராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், சௌதியில் முதற்கட்ட சிகிச்சைகள் முடிந்து தொடர்ந்து சிகிச்சை பெறுவதற்காக விமானி ஸ்மித் மச்சார் இன்று ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, மத்திய வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.
முன்னதாக, தாக்குதலை எதிர்த்து சண்டையிட்டு நூற்றுக்கணக்கான பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய இந்திய விமானியை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோர் ஹீரோ எனக் குறிப்பிட்டு பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Indian pilot Smith Machar, who was stabbed by a fellow pilot on a flight from Dubai to Israel, has been transferred to Abu Dhabi for further treatment.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.