FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

படிவம் 6 -யை சட்டவிரோதமாக ஞானேஷ் குமார் மாற்றியுள்ளது உறுதியாகிறது! ராகுல் காந்தி

படிவம் 6 குறித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பதிவு...

ஞானேஷ் குமார் / ராகுல் காந்தி - கோப்புப் படம்
பகிர்:

தலைமை நீதிபதி கூறியுள்ளதன் மூலமாக, படிவம் 6 -யை ஞானேஷ் குமார் சட்டவிரோதமாக மாற்றியுள்ளார் என்பது உறுதியாகிறது என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளில் தன்னிச்சையாக செயல்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்படும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி எதிர்க்கட்சிகளும் இளைஞர்களும் போராட்டம் நடத்தி வருகின்றன.

இந்நிலையில் இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட ஒரு வழக்கு, இன்று தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பக்சி, வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.

Advertisement

Advertisement

அப்போது, குற்றச்சாட்டுகள் குறித்து பதிலளித்த ஞானேஷ் குமார் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், அவரை இடைநீக்கம் செய்ய உத்தரவிட மறுப்பு தெரிவித்தனர்.

அதேநேரத்தில் சட்டத்திற்கு புறம்பாக தேர்தல் ஆணையம் முடிவெடுத்திருந்தால் அது ரத்து செய்யப்படும் என்றும் கூறியுள்ளனர்.

மேலும், 'படிவம் 6' உடன் புதிதாக இணைக்கப்பட்ட உறுதிமொழியை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதாக தேர்தல் ஆணையம் அண்மையில் கூறியிருந்த நிலையில், 'அதற்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளிக்கவில்லை' என்று தலைமை நீதிபதி தெளிவுபடுத்தியுள்ளார்.

இதையடுத்து ராகுல் காந்தி இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில்,

"ஞானேஷ் குமார் படிவம் 6 -யை சட்டவிரோதமாகவும் ஒருதலைப்பட்சமாகவும் மாற்றினார் என்பது இப்போது சந்தேகத்திற்கு இடமின்றி உறுதியாகியுள்ளது.

பாஜகவுக்கு உதவுவதற்காக அவர் தனது பதவியை முறைகேடாகப் பயன்படுத்தியதற்கு இது மற்றொரு சான்றாகும்.

ஞானேஷ் குமாரும் ஜனநாயகத்தின் மீதான இந்தக் குற்றவியல் தாக்குதலில் ஈடுபட்ட மற்ற அனைவரும் இதற்கு பொறுப்பாவார்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

summary

Gyanesh Kumar changed Form 6 illegally and unilaterally: Rahul gandhi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments