FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

காந்தியை கிண்டல் செய்து ரீல்ஸ்! பெண் கைது! காவல்துறை செய்த தரமான சம்பவம்!!

மகாத்மா காந்தியை கிண்டல் செய்து ரீல்ஸ் வெளியிட்ட பெண் கைது செய்யப்பட்டது பற்றி..

சூரத் பெண் - video grab
பகிர்:

குஜராத் மாநிலம் சூரத் நகரைச் சேர்ந்த சமூக வலைத்தள பிரபலமான சிம்ரன் படேல் (47), ரூ.500 நோட்டை வைத்து மகாத்மா காந்தியை கிண்டல் செய்து ரீல்ஸ் வெளியிட்ட குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

அக்.1ஆம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அவர் வெளியிட்ட ரீல்ஸ், மகாத்மா காந்தியின் மரியாதையைக் குலைக்கும் வகையில் பேசி, விடியோ வெளியிட்டிருந்ததாகக் குற்றம்சாட்டப்பட்டது.

இது குறித்து சமூக செயற்பாட்டாளர் ஒருவர் அளித்த புகாரின் பெயரில், வழக்குப் பதிவு செய்த சூரத் காவல்துறை, சிம்ரனை கைது செய்துள்ளது. மேலும், அவர் தன்னுடைய விடியோவுக்கு மன்னிப்பும் கேட்டுள்ள விடியோவும் வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

அதோடு நின்றுவிடாமல், சிம்ரனின் விடியோவை கட் செய்து, அதனுடன், அவரைக் கைது செய்துள்ள விடியோவையும் மகாத்மா காந்தியை அவமதித்து வெளியிட்ட விடியோவுக்கு மன்னிப்புக் கேட்கும் விடியோவையும் இணைத்து சூரத் காவல்துறை தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் விடியோ வெளியிட்டு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

கைதாகியிருக்கும் சிம்ரன் போன்று, தவறான கருத்துகளை வெளிப்படுத்தும் வகையில் மக்கள் யாரும் ரீல்ஸ் எடுத்து சமூக வலைத்தளத்தில் பரப்ப வேண்டாம், அதுவும் குற்றம்தான் என்று பதிவிட்டுள்ளனர்.

தற்போது சிம்ரனின் கைது விடியோ வைரலாகியிருக்கிறது-

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments