பேஸ்புக் மூலமாக பேசிப் பழகி முதியவரிடம் ரூ. 38 லட்சம் ஏமாற்றிய இளம்பெண்!
பேஸ்புக்கில் 'நட்பு அழைப்பு' மூலமாக முதியவரிடம் இளம்பெண் மோசடி செய்தது பற்றி....
ஹைதராபாத்தைச் சேர்ந்த 70 வயது முதியவர் ஒருவர், முகநூல் மூலமாக பேசி பழகிய பெண்ணிடம் ரூ. 38 லட்சம் இழந்துள்ளார்.
ஹைதராபாத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஊழியர், சமீபத்தில் அங்குள்ள சைபர் கிரைமில் ஒரு புகார் அளித்துள்ளார்.
அந்த முதியவருக்கு பேஸ்புக்கில் ஒரு பெண்ணிடம் இருந்து 'நட்பு அழைப்பு' (friend request) வந்துள்ளது. அவரும் அதை ஏற்றுக்கொண்டு தொடர்ந்து நட்பாக பேசி வந்துள்ளார்.
Advertisement
Advertisement
நாளடைவில் முதியவரிடம் நம்பிக்கையைப் பெற அந்த பெண் அந்தரங்கமாகவும் சில விஷயங்களைப் பேசியுள்ளார். பின்னர் வீட்டுச் செலவுக்காக பணம் வேண்டும் என்று கேட்டுள்ளார். அவரும் கொடுத்துள்ளார்.
பின்னர் இருவரும் மேலும் தொடர்ந்து பேசி பழகி வர, ஒரு கட்டத்தில் அந்த பெண், பேசிய உரையாடல்களை வைத்து அந்த முதியவரை மிரட்டி பணம் கேட்டுள்ளார். அதன்படி அவரிடம் ரூ. 38 லட்சம் வரை பெற்றுள்ளார்.
முதியவரின் புகாரையடுத்து அந்த பெண் ஆந்திரப் பிரதேச மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த அந்த பெண்ணை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.
இளம்பெண்கள் இதுபோன்ற முதியவர்களுக்கு பேஸ்புக் அல்லது சமூக ஊடகங்கள் மூலமாக நட்பு அழைப்பு கொடுத்து பேசி பழகி பின்னர் பணமோசடி செய்வதாகவும் அதனால் எச்சரிக்கையாக இருக்கும்படியும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
வீட்டுச் செலவு, அவசர மருத்துவ நிலை, பரிசுகள் என்று கேட்டு பணம் பெறுகின்றனர். தர மறுத்தால், தங்கள் பேசிய உரையாடல்களை வைத்து மிரட்டுகிறார்கள். எனவே பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் தெரியாத நபர்களை நண்பர்களாக ஏற்றுக்கொள்ள வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Fraudster Held for Extorting Rs.38 Lakh from Retired Employee in Hyderabad
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.