FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைக்குப் பின்னால் மோடி! - கார்கே காட்டம்!

தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளுக்குப் பின்னணியில் பிரதமர் மோடி இருப்பதாக கார்கே குற்றச்சாட்டு...

தில்லி போராட்டத்தில் கார்கே... - ENS
பகிர்:

ஜனநாயக உரிமைகளைக் காப்பாற்ற எதிர்க்கட்சிகள் ஒற்றுமையோடு செயல்படுவோம் என காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளில், சட்டவிரோதமான முறையில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாகச் செயல்பட்டு முறைக்கேட்டில் ஈடுபட்டதாக வெளியான செய்திகளால் நாடு முழுவதும் அவருக்கு எதிராகப் போராட்டம் வெடித்துள்ளது.

ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி இந்தியா கூட்டணியைச் சேர்ந்த காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தில்லியிலுள்ள ஜந்தர் மந்தரில் இன்று (அக்.7) போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளுக்குப் பின்னால் பிரதமர் நரேந்திர மோடி இருப்பதாகவும், ஜனநாயக உரிமைகளைக் காப்பாற்ற எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படுவோம் எனவும் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

இதுபற்றி, அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில்,

“இந்தியா கூட்டணியின் அனைத்துக் கூட்டணிக் கட்சிகளும் இன்று ஞானேஷ் குமாருக்கு எதிராகப் போராட்டம் நடத்துவோம்.

எங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரையில் நாங்கள் தொடர்ந்து போராட்டம் நடத்துவோம். தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளின் பின்னணியில் நரேந்திர மோடி இருக்கிறார். அதாவது, ஜனநாயகத்தை அழிப்பதற்கு மோடியே முயற்சி செய்து வருகிறார்.

எனவே, அனைத்துக் கட்சிகளின் உறுப்பினர்களாகிய நாங்கள் ஒன்றிணைந்து நாட்டு மக்களிடம் அவர்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன என்பதைக் கூற விரும்புகிறோம்.

மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க எங்களின் மீது எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டாலும், நாங்கள் அதற்குப் பயப்படவோ அல்லது பின்வாங்கவோ மாட்டோம்” எனத் தெரிவித்துள்ளார்.

summary

Congress leader Mallikarjun Kharge, has stated that opposition parties will work unitedly to safeguard democratic rights.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments