FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஜந்தர் மந்தர் போராட்டம்: செய்தியாளர்கள் தடுத்து நிறுத்தம்; பத்திரிகையாளர் அமைப்புகள் கண்டனம்!

ஜந்தர் மந்தர் போரட்டத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்கள் தடுத்து நிறுத்தப்பட்டதற்கு அதன் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளது குறித்து...

11 அக்டோபர் 2026, 9:28 am IST
தில்லி போராட்டம் - கோப்புப் படம்
பகிர்:

ஜந்தர் மந்தர் போரட்டத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்கள் தடுத்து நிறுத்தப்பட்டதற்கு அதன் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

தில்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டங்களின் போது, செய்தியாளர்கள் தடுத்து நிறுத்தப்பட்டதற்கும் மற்றும் பெண் பத்திரிகையாளர்கள் மீது காவல்துறை நடத்திய தாக்குதலுக்கும் பத்திரிகையாளர் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த விவகாரத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாக செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதையடுத்து, அவர் பதவி விலக வலியுறுத்தி கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் ஜந்தர் மந்தரில் நேற்று (அக். 10) போராட்டம் நடத்தினர்.

Advertisement

Advertisement

ஆனால், தில்லி முழுவதும் சுமார் 20,000 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணிகளில் குவிக்கப்பட்டு, போராட முயன்ற இளைஞர்கள், சிஜேபி பிரதிதிகள், அரசியல் தலைவர்கள் போன்றோர் கைது செய்யப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து, போராட்டக் களத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்களும் தடுத்து நிறுத்தப்பட்டு அவர்களில் சிலர் கைது செய்யப்பட்டனர்.

காவல்துறையின் இந்தக் கடுமையான செயலுக்கு இந்தியப் பத்திரிகையாளர் சங்கம் (PCI) மற்றும் இந்திய மகளிர் பத்திரிகையாளர் படை (IWPC) உள்ளிட்ட நான்கு பத்திரிகையாளர் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

பத்திரிகையாளர்கள் தங்களது அடையாள அட்டைகளைக் காட்டியபோதிலும் பல பத்திரிகையாளர்களைக் காவல்துறை தடுத்து வைத்ததாகவும், சில செய்தியாளர்களின் கைபேசிகள் மற்றும் பொருள்களை பறிமுதல் செய்ததாகவும் அந்த அமைப்புகள் சுட்டிக்காட்டின.

மேலும், இதுகுறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் காவல்துறையினர் மன்னிப்பு கோர வேண்டும் என்றும் பத்திரிகையாளர் அமைப்புகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

Organisations have condemned the obstruction of journalists who went to cover the protest at Jantar Mantar.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments