சிஜேபியை முந்திய ஆம் ஆத்மி! குடியரசுத் தலைவர் மாளிகை அருகே தேசியக் கொடி பேரணி!
தில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையின் அருகே ஆம் ஆத்மி கட்சியினர் தேசியக் கொடி பேரணி...
தில்லியில், குடியரசுத் தலைவர் மாளிகையின் அருகே ஆம் ஆத்மி கட்சியினர் தேசியக் கொடி பேரணி நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக சிஜேபி நிறுவனர் அபிஜீத் தீப்கே தலைமையில் இன்று (அக். 16) மாலை தில்லியின் கன்னாட் பிளேஸ் பகுதியிலுள்ள சென்ட்ரல் பூங்காவில் தேசியக் கொடிப் பேரணி நடைபெறவுள்ளது.
இந்தப் பேரணியில், ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், அப்பகுதியில் சுமார் 6,000-க்கும் அதிகமான காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், சிஜேபியின் பேரணிக்கு முன்னதாக ஆம் ஆத்மி கட்சியினர் குடியரசுத் தலைவர் மாளிகையின் அருகிலுள்ள நார்த் அவென்யூ பகுதியில் காவல் துறையினர் முன்னிலையில் தேசியக் கொடி பேரணி நடத்தியுள்ளனர்.
இந்தப் பேரணியில் பங்கேற்ற தில்லி ஆம் ஆத்மி கட்சித் தலைவர் சௌரவ் பரத்வாஜ் கூறுகையில்,
“குடிமக்கள் தேசியக் கொடியை எங்கே ஏற்றவேண்டும் என்பதை அரசோ அல்லது காவல்துறையோ தீர்மானிக்க முடியாது. அது அவர்களின் வேலை அல்ல.
நாங்கள் இங்கே கொடியை ஏற்ற வேண்டும் என நினைத்ததால் அதைச் செய்தோம். மாலை நடைபெறும் சிஜேபியின் பேரணியிலும் நாங்கள் கலந்துகொள்வோம். மக்கள் தங்களால் முயன்ற இடத்தில் எல்லாம் மூவர்ணக் கொடியை ஏற்றலாம்” எனக் கூறியுள்ளார்.
இருப்பினும், சிஜேபி பேரணி நடத்துவதாக அறிவிக்கப்பட்ட சென்ட்ரல் பூங்கா நிர்வாகக் காரணங்களால் இன்று மூடப்படுவதாக புது தில்லி மாநகராட்சி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Aam Aadmi Party held a march near the Rashtrapati Bhavan in Delhi, carrying the national flag.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.