நானா படேகர் / ஸ்மித் மச்சார்? மும்பையில் புதிய பாலத்துக்கு பெயர் சூட்ட இருதரப்பு மோதல்!
மும்பையில் புதிய பாலத்துக்கு பெயர் வைக்க இருதரப்பினர் இடையே மோதல் வெடித்துள்ளதைப் பற்றி...
மும்பையில் புதியதாகக் கட்டப்பட்டுள்ள வித்யாவிஹார் பாலம் திறக்கப்படுவதற்கு முன்பே, பாலத்துக்குப் பெயரிடுவது தொடர்பாக புதிய சர்ச்சை வெடித்துள்ளது.
மும்பையின் கிழக்கு புறநகர்ப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில், பிருஹன்மும்பை மாநகராட்சி 480 மீட்டர் நீளமுள்ள உயர்நிலை ரயில்வே மேம்பாலத்தைக் கட்டத் திட்டமிட்டது.
சாலை விரிக்கவாக்கப் பணிகளுக்காக 53 வீடுகள் இடிக்கப்படவிருந்த நிலையில், அதைத் தவிர்த்து மும்பையின் கிழக்கு மேற்கு வித்யாவிஹார் மேம்பாலம் 650 மீட்டர் நீளத்தில் சுமார் ரூ. 106 கோடியில் கட்டப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
காட்கோபரில் உள்ள வித்யாவிகார் ரயில் நிலையத்தின் கிழக்குப் பகுதியில் இருக்கும் ராமச்சந்திர செம்பூர்கர் மார்க்கை மேற்குப் பகுதியில் இருக்கும் லால் பகதூர் சாஸ்திரி மார்க்குடன் இணைக்கும் வகையில் 100 மீட்டர் நீளத்துக்கு ரயில் தண்டவாளத்தின் மேலே இந்தப் பாலம் கட்டப்பட்டுள்ளது.
இந்தப் பாலத்தின் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை காலை திட்டமிடப்பட்டிருந்த நிலையில், பாலத்துக்கு யாருடைய பெயரை வைப்பது என்ற சர்ச்சை வெடித்திருக்கிறது.
சிவசேனா (உத்தவ் பிரிவு) மறைந்த பாலிவுட் நடிகர் நானா படேகர் பெயர் சூட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பாஜக எம்.எல்.ஏ. பாரக் பாஷா, இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் சென்ற ஃப்ளைதுபை விமானத்தை விபத்திலிருந்து காப்பாற்றிய விமானி ஸ்மித் மச்சாரின் பெயரை வைக்க வேண்டும் என்று பரிந்துரைக்க இருதரப்புக்கும் இடையே பிரச்சினை வெடித்தது.
நானா படேகரும், மச்சாரும் ஒரே மாதிரியான பின்புலத்தைக் கொண்டவர்கள். மகாராஷ்டிரத்தின் ராய்காட் மாவட்டத்தின் முருட்-ஜஞ்சிராவில் பிறந்த நானா படேகர், மூன்று தேசிய விருதுகளையும் 2013-ல் பத்மஸ்ரீ விருதையும் வென்றார். அவரைப் போல, காட்கோபர் கிழக்கில் எளிய பின்னணி கொண்ட ஜவுளி வணிகக் குடும்பத்தில் பிறந்தவர் ஸ்மித் மச்சார். அவர் விமான விபத்தில் இருந்து 170 பேரின் உயிர்களைக் காப்பாற்றினார்.
“பத்மஸ்ரீ நானா படேகர் சேது” என்ற பெயரைச் சூட்டக் கோரி மேயர் ரிது தாவ்டேவுக்கு உத்தவ் பிரிவினர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். இருப்பினும், இந்த விவகாரத்தில் மேயர் எந்தக் கருத்தும் தெரிவிக்காத நிலையில், பிருஹன்மும்பை மாநகராட்சி அவைத் தலைவரான கணேஷ் கங்கர், “ஒரு பாலத்தைவிட திரையரங்குக்கு நானா படேகரின் பெயரைச் சூட்டுவதே பொருத்தமாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
A naming row has erupted over Mumbai’s new East-West Vidyavihar bridge before it has even opened to traffic. The Shiv Sena (UBT) wants it named after late actor Nana Patekar, while BJP MLA Parag Shah has proposed Captain Smit Machchhar, the pilot hailed for foiling a mid-air hijacking attempt, instead.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.