FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

வங்கதேசம், பிரான்ஸ் போல இந்தியாவில் தேசவிரோத வன்முறைச் சதி: கிரண் ரிஜிஜு

வங்கதேசம் மற்றும் பிரான்ஸில் நடைபெற்றதைப் போன்று இந்தியாவிலும் தேசவிரோத சக்திகள் வன்முறைச் சதியில் ஈடுபட்டுள்ளதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றம்சாட்டியுள்ளார்.

19 அக்டோபர் 2026, 5:46 am IST
கிரண் ரிஜிஜு - கோப்புப் படம்
பகிர்:

வங்கதேசம் மற்றும் பிரான்ஸில் நடைபெற்றதைப் போன்று இந்தியாவிலும் தேசவிரோத சக்திகள் வன்முறைச் சதியில் ஈடுபட்டுள்ளதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றம்சாட்டியுள்ளார்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர நடவடிக்கைக்கு எதிராகவும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலகக் கோரியும் எதிர்க்கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் தில்லியில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன. இந்தக் கட்சிகளையும், அமைப்பினரையும் மறைமுகமாகக் குறிப்பிடும் வகையில் மத்திய அமைச்சர் கிரிண் ரிஜிஜு எக்ஸ் தளத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: வங்கதேசத்திலும் பிரான்ஸிலும் ஆட்சியைக் கவிழ்க்கும் நோக்கில் தீட்டப்பட்ட சதி காரணமாக வன்முறைச் சம்பவங்கள் நடந்தன. இளைஞர்களைத் தூண்டி விடும் நோக்கில் அதேபோன்ற சதியில் நம் நாட்டில் உள்ள தேசவிரோதக் கும்பல்களைச் சேர்ந்தவர்களும், சில அரசியல் தலைவர்களும் ஈடுபட்டனர்.

தெருக்களில் வன்முறையை ஏற்படுத்தும் நோக்கிலான இத்தகைய ஆபத்தான சதித் திட்டத்தை தீட்டியவர்கள் இந்தியா என்பது வங்கதேசமோ, பிரான்ஸோ அல்ல என்பதை மறந்துவிட்டனர்.

Advertisement

Advertisement

இந்தியாவில் ஆட்சி மாற்றம் என்பது நிச்சயமாக சாத்தியமாகக் கூடிய ஒன்றுதான். ஆனால் இங்கு ஆட்சி மாற்றம் என்பது தேர்தல்கள் மூலம் சாத்தியமாகுமே தவிர அமெரிக்க சமூக, அரசியல் ஆர்வலர் ஜார்ஜ் சோரோஸ் போன்றவர்களால் சாத்தியமாகாது என்று கிரண் ரிஜிஜு தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

ஜார்ஜ் சோரோஸ் மற்றும் அவருக்குச் சொந்தமான அமைப்புகள் இந்தியாவின் நலன்களுக்கு எதிராகச் செயல்பட்டு வருவதாக மத்தியில் ஆளும் பாஜக குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

பாஜக மூத்த தலைவர் முக்தார் அப்பாஸ் நக்வி - Mukhtar Abbas Naqvi

ஆட்சி மாற்ற வெறியில் எதிர்க்கட்சிகள்: நக்வி

மத்தியில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற வெறியில் எதிர்க்கட்சிகள் செயல்படுவதாக பாஜக மூத்த தலைவர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தில்லியில் செய்தியாளர்களிடம் மேலும் கூறுகையில், 'சில அரசியல் கட்சிகள் ஆட்சி மாற்ற வெறி பிடித்து அலைகின்றன. இந்தியாவில் வாக்குகள் மூலம் ஆட்சி மாற்றம் ஏற்படுமே தவிர தோட்டாக்களின் அச்சுறுத்தலில் ஆட்சி மாற்றம் நிகழாது.

1975 - 77 காலகட்டத்தில் நாட்டில் அமலில் இருந்த அவசரநிலையைத் தவிர 18 பொதுத் தேர்தல்கள், நூற்றுக்கணக்கான சட்டப் பேரவை மற்றும் பஞ்சாயத்து உள்ளிட்டவற்றுக்கான தேர்தல்களில் மக்கள் வாக்குச்சீட்டை தங்கள் ஆயுதங்களாகப் பயன்படுத்தினார்களே தவிர தோட்டாக்களைப் பயன்படுத்தவில்லை.

இன்றும் தேர்தல்கள் மூலம் மக்கள் தீர்ப்பளிப்பது என்பது நம் நாட்டின் பரந்துபட்ட ஜனநாயகத்தின் உணர்வாகும். அது இன்றும் வலுவாக உள்ளது. ஆட்சி மாற்றத்துக்காக தற்போது போராட்டம் என்ற பெயரில் அராஜகத்தைத் தூண்டிவிடும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சதியாளர்கள் இறுதியில் அதிருப்தியே அடைவார்கள்' என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments