எத்தனை நாள் இந்த நாடகம்? ராகுல் காந்திக்கு கிரண் ரிஜிஜு கேள்வி!
ராகுல் காந்தியின் நாடகம் காங்கிரஸின் மறுமலர்ச்சிக்கு உதவாது என கிரண் ரிஜிஜு பேசியது குறித்து...
தலைமைத் தேர்தல் ஆணையரை பதவி விலக வலியுறுத்தி இந்தியா கூட்டணிக் கட்சி எம்.பி.க்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், எத்தனை நாள்களுக்கு இந்த நாடகம் என ராகுல் காந்தியிடம் மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், அரசியலமைப்பு நிறுவனங்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்துவது, ஒரு பழமையான கட்சிக்கு மக்கள் ஆதரவை ஒருபோதும் திரும்ப பெற்றுத்தராது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களுடன் கிரண் ரிஜிஜு பேசியதாவது:
Advertisement
Advertisement
''தேர்தல் ஆணையத்தின் மீதும் உச்சநீதிமன்றத்தின் மீதும் காங்கிரஸ் கட்சி, ராகுல் காந்தி மற்றும் அவர்களுக்கு ஆராதனை செய்பவர்கள் மேற்கொள்ளும் தினசரி நாடகம் நிறுத்தப்பட வேண்டும். 2014 ஆம் ஆண்டு முதல் இந்த நாடகம் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இந்த நாடகம் எவ்வளவு காலம் தொடரும்.
ஜனநாயகப்படி நீங்கள் மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்றால், மக்களின் விருப்பத்தேர்வைப் பெற வேண்டும். அதில் நீங்கள் தோல்வி அடைந்துவிட்டு, தேர்தல் ஆணையத்தை குற்றம் சாட்டுவது நியாயமா?
உச்சநீதிமன்றத்தின் மீதும் நம்பிக்கை இல்லை என்று நீதித்துறையை கடுமையாக சாடுகிறீர்கள். தேர்தல் ஆணையம் ஊழல் நிறைந்தது என்றும், அரசு ஊழல் நிறைந்தது என்றும் கூறுகிறீர்கள்.
இது ஜனநாயகத்துக்கும் பலனளிக்காது. காங்கிரஸ் கட்சியின் மறுமலர்ச்சிக்கும் வழிவகுக்காது. ராகுல் காந்திக்கு ஒன்றை சொல்லிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன். மோடியிடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள்.
சுயநலத்திற்காக அல்லாமல், நாட்டு மக்களுக்காக தன்னலமின்றி உழைக்கிறார். மக்களுக்கு நீங்கள் சேவையாற்ற விரும்பினால், அவர்கள் உங்கள் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும். நாடகத்தை அரங்கேற்றுவது ஒருபோதும் பலனளிக்காது'' எனக் குறிப்பிட்டார்.
How long will this drama continue? Kiren Rijiju slams Rahul Gandhi after march to EC
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.