FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

கேரளத்தின் புதிய ஆளுநராக ஓம் பிரகாஷ் மாத்தூர் பதவியேற்பு!

கேரளத்தின் புதிய ஆளுநராக ஓம் பிரகாஷ் மாத்தூர் பதவியேற்றுக்கொண்டது குறித்து...

கேரளத்தின் புதிய ஆளுநராக ஓம் பிரகாஷ் மாத்தூர் பதவியேற்பு... - ENS
பகிர்:

கேரளத்தின் 24 ஆவது ஆளுநராக ஓம் பிரகாஷ் மாத்தூர் இன்று (அக். 23) பதவியேற்றுக்கொண்டார்.

தமிழகம், கர்நாடகம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் புதிய ஆளுநர்களை நியமித்து கடந்த சில நாள்களுக்கு முன்பு மத்திய அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, கேரளத்தின் ஆளுநராகப் பதவி வகித்து வந்த ராஜேந்திர ஆர்லேகர் தமிழகத்தின் முழு நேர ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில், கேரளத்தின் 24 ஆவது ஆளுநராக ஓம் பிரகாஷ் மாத்தூருக்கு, கேரள உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சௌமென் சென் இன்று பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.

Advertisement

Advertisement

இந்த நிகழ்ச்சியில், கேரள முதல்வர் வி.டி. சதீசன், கேரளத்தின் நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவரான ஓம் பிரகாஷ் மாத்தூர், சிக்கிம் மாநிலத்தின் ஆளுநராகப் பதவி வகித்து வந்தார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் செயல்பட்டு வந்த அவர் பாஜகவின் குஜராத் மாநிலத்தின் பொறுப்பு பொதுச்செயலராகவும் பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.

summary

Om Prakash Mathur took oath as the 24th Governor of Kerala today (Oct. 23).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments