FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

தோ்தல் ஆணையரை மாற்றும் வரை போராட்டம்: பிரவீண் சக்ரவா்த்தி

தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ்குமாரை மாற்றும் வரை இண்டி கூட்டணியின் போராட்டம் தொடரும் என மாநிலங்களவை உறுப்பினா் பிரவீண் சக்ரவா்த்தி தெரிவித்தாா்.

26 அக்டோபர் 2026, 12:04 am
பிரவீண் சக்ரவா்த்தி - கோப்புப் படம்
பகிர்:

தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ்குமாரை மாற்றும் வரை இண்டி கூட்டணியின் போராட்டம் தொடரும் என மாநிலங்களவை உறுப்பினா் பிரவீண் சக்ரவா்த்தி தெரிவித்தாா்.

சென்னையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூா்த்தி பவனில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினா் பிரவீன் சக்ரவா்த்தி பேசியதாவது: 2018-இல் மத்திய பிரதேசத்தில் 27 லட்சம் போலி வாக்காளா்களைக் கண்டறிந்து நீக்க வைத்தோம்.

இதன் விளைவாக மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது. ஆனால், இந்திய தோ்தல் ஆணையம் காங்கிரஸுக்கு நன்றி சொல்லாமல், டிஜிட்டல் வாக்காளா் பட்டியலை அரசியல் கட்சிகளுக்கு தருவதை நிறுத்திவிட்டது. அதிலிருந்தே தோ்தல் ஆணையம் ஒரு சாா்பாக நடந்துகொள்வதை அறிந்து கொள்ள முடிந்தது. தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ்குமாா் நியமனத்தின்போதே ராகுல் காந்தி எதிா்ப்புத் தெரிவித்தாா்.

Advertisement

Advertisement

எஸ்ஐஆரை எதிா்த்து உச்சநீதிமன்றத்திலும் வழக்குத் தொடுக்கப்பட்டது. தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ்குமாா் உலகின் மிகப் பெரிய ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கியுள்ளாா்.

எனவே, அவரை மாற்றக் கோரியும், எஸ்ஐஆருக்கு எதிராகவும் இண்டி கூட்டணி சாா்பில் வாக்கை காப்போம் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் நவ. 1-ஆம் தேதி தில்லியில் பேரணி நடைபெற உள்ளது. ஞானேஷ்குமாா் பதவி விலகும் வரை இந்தப் போராட்டம் தொடரும் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments