மாடியிலிருந்து உயர் அழுத்த மின் ஒயர் மீது எச்சில் துப்பியவர் பலி! பதற வைக்கும் காட்சி
மாடியிலிருந்து உயர் அழுத்த மின் ஒயர் மீது எச்சில் துப்பியவர் உடல் கருகி பலி
அடுக்குமாடிக் குடியிருப்பின் 3வது மாடி பால்கனியிலிருந்து கீழே இருந்த உயர் அழுத்த மின் ஒயர் மீது எச்சில் துப்பியவர் மீது மின்சாரம் பாய்ந்து, உடல் கருகி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
மத்திய பிரதேச மாநிலம் விதிஷா மாவட்டத்தில் கடந்த வாரம் இந்த சம்பவம் நடந்துள்ளது.
65 வயது நபர், மூன்றாவது மாடியிலிருந்து குட்கா போட்டுவிட்டு, கீழே இருந்த உயர் அழுத்த மின் ஒயர் மீது எச்சில் துப்பியபோது, அந்த எச்சில் வழியாக (நண்பன் படத்தில் வரும் காட்சியைப் போல) மின்சாரம் பாய்ந்து, உடல் கருகி பலியாகியிருக்கிறார்.
Advertisement
Advertisement
பிரபுலால் குப்தா என்ற 65 வயது நபர் பத்தாண்டுகளுக்கும் மேலாக அந்த வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வந்துள்ளார். வெள்ளிக்கிழமை பகல் 1 மணிக்கு பால்கனியில் நின்றுகொண்டிருந்த பிரபுலால், குட்கா மென்றுவிட்டு, கீழே எச்சில் துப்பியிருக்கிறார்.
அப்போது அவரது எச்சில், மின் ஒயர் மீது பட்டதில், சம்பவ இடத்திலேயே அவர் பலியாகியிருக்கிறார். இது பற்றி, மின்சாரத் துறையைச் சேர்ந்தவர்கள், எச்சில் மூலம் சில வேளைகளில் மின்சாரம் கடத்தப்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. எச்சில் துப்பியவரிடமிருந்து, மின்சார ஒயர் வரை ஒரு தொடர்பு ஏற்படும்போது இந்த சம்பவம் நேரிட்டிருக்கலாம் என்கிறார்கள்.
உயர் அழுத்த மின் ஒயர் என்பதால், இதுபோன்ற அபாயம் நேரிட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அதுபோல அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வாழ்வோர் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று இதுபோன்ற சம்பவங்கள் காட்டுவதாகவும் கூறப்படுகிறது.
குடியிருப்புகளை ஓட்டி உயர் அழுத்த மின் ஒயர்கள் செல்வது குறித்து முன்கூட்டியே, புகார்கள் கொடுத்திருந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியிருக்கிறார்கள்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.