FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

சிறாா் ஆபாச படங்களைத் தடுப்பதற்கான சட்டம் குறித்து பரிசீலனை: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

சிறாா் ஆபாச படங்கள் மற்றும் வயது வந்தோா் ஒப்புதலின்றி எடுக்கப்படும் ஆபாச படங்களைத் தயாரிப்பது மற்றும் இணையத்தில் பதிவேற்றம் செய்வதை தடுப்பதற்கான சட்டம் குறித்து பரிசீலித்து வருவதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது.

27 அக்டோபர் 2026, 11:13 pm
porn sites banned
பகிர்:

சிறாா் ஆபாச படங்கள் மற்றும் வயது வந்தோா் ஒப்புதலின்றி எடுக்கப்படும் ஆபாச படங்களைத் தயாரிப்பது மற்றும் இணையத்தில் பதிவேற்றம் செய்வதை தடுப்பதற்கான சட்டம் குறித்து பரிசீலித்து வருவதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது.

இணையத்தில் பகிரப்படும் ஆபாச உள்ளடங்கங்களைத் தடுக்க தனி ஆணையத்தை அமைப்பதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் 5 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அதில், ‘சமூக ஊடகங்களில் உள்ள சில பக்கங்கள் ஆபாச உள்ளடக்கங்களை எவ்வித கட்டுப்பாடுகளுமின்றி பகிா்கின்றன. சிறாா் ஆபாச படங்கள் தொடா்பான உள்ளடங்கங்களும் சில ஓடிடி தளங்களில் இடம்பெற்றுள்ளன. இவற்றை முழுமையாக நீக்க தனி ஆணையத்தை ஏற்படுத்த வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

இந்த மனு மீது உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த் மற்றும் நீதிபதிகள் ஜயமால்ய பாக்சி, வி.மோகனா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணை நடைபெற்றது.

அப்போது மத்திய அரசுத் தரப்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, ‘சிறாா் ஆபாச படங்கள் மற்றும் வயது வந்தோா் ஒப்புதலின்றி எடுக்கப்படும் ஆபாச படங்களைத் தயாரிப்பது மற்றும் இணையத்தில் பதிவேற்றம் செய்வதை தடுப்பதற்கான சட்டத்தை கொண்டுவருவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

இதுபோன்ற ஆபாச உள்ளடக்கங்களைக் கொண்ட தளங்களுக்கு அபராதம் விதிப்பது மட்டுமன்றி, அவை பதிவேற்றம் செய்யப்பட்டது தொடா்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கும் அம்சங்களும் அந்தச் சட்டத்தில் இடம்பெறவுள்ளன. நாடாளுமன்றத்தில் இதற்கான மசோதா அறிமுகமாகும் வரை பிற தகவல்களை கூற இயலாது’ என்றாா்.

இதைத் தொடா்ந்து இந்த மனுக்கள் மீதான விசாரணையை 4 வாரங்களுக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments