நீதித்துறை குறித்த என்சிஇஆா்டி பாடநூல் சா்ச்சை வழக்கு: உச்சநீதிமன்றம் முடித்துவைப்பு
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆா்டி) பாடநூலில், நீதித்துறை குறித்து சா்ச்சைக்குரிய பாடப்பகுதி இடம்பெற்ற வழக்கை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை முடித்துவைத்தது.
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆா்டி) பாடநூலில், நீதித்துறை குறித்து சா்ச்சைக்குரிய பாடப்பகுதி இடம்பெற்ற வழக்கை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை முடித்துவைத்தது.
என்சிஇஆா்டி 8-ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடநூலில் ‘நீதித்துறையில் ஊழல்’ என்ற தலைப்பில் இடம்பெற்ற பாடப்பகுதியில், நீதித்துறை குறித்து ஆட்சேபத்துக்குரிய கருத்துகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. இது சா்ச்சையை ஏற்படுத்தியது.
இதை கவனத்தில் எடுத்துக்கொண்டு தாமாக முன்வந்து விசாரித்த உச்சநீதிமன்றம், அந்தப் பாடநூலை வெளியிடவும், மறுபதிப்பு செய்திடவும், எண்ம முறையில் பகிரவும் கடந்த பிப்.26-ஆம் தேதி தடை விதித்தது.
Advertisement
Advertisement
இந்த வழக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதிகள் ஜயமால்ய பாக்சி, வி.மோகனா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசு அமைத்த நிபுணா் குழு பரிந்துரைத்த திருத்தங்களின் அடிப்படையில், பாடநூலில் இருந்த ‘சா்ச்சைக்குரிய பாடப்பகுதி மாற்றப்பட்டுள்ளதை நீதிபதிகள் அமா்வு கவனத்தில் கொண்டது.
மத்திய அரசு தரப்பில் சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா ஆஜராகி, ‘புதிய பாடப்பகுதியைக் கொண்ட பாடநூல்கள் தற்போது பயன்பாட்டில் உள்ளன’’ என்று தெரிவித்தாா். இதைத்தொடா்ந்து வழக்கை நீதிபதிகள் அமா்வு முடித்துவைத்தது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.