FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

2 இந்தியன் முஜாஹிதீன் பயங்கரவாதிகளுக்கு ஜாமீன் உச்சநீதிமன்றம்

12 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த 2 இந்தியன் முஜாஹிதீன் பயங்கரவாதிகளுக்கு உச்சநீதிமன்றம் பிணை அளித்து உத்தரவிட்டது.

Updated On : 30 ஜூலை 2026, 2:08 am IST
உச்சநீதிமன்றம்
பகிர்:

12 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த 2 இந்தியன் முஜாஹிதீன் பயங்கரவாதிகளுக்கு உச்சநீதிமன்றம் பிணை அளித்து உத்தரவிட்டது.

ராஜஸ்தான் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற பயங்கரவாத சம்பவங்கள் தொடா்பாக பதிவு செய்யப்பட்ட 3 வழக்குகளில் முகம்மது சஹிப் அன்சாரி, வக்காா் ஆசாா் ஆகிய 2 இந்தியன் முஜாஹிதீன் பயங்கரவாதிகள் தில்லி சிறப்புப் படை காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனா். அவா்கள் இருவரும் கடந்த 12 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தனா். தில்லி உயா்நீதிமன்றம் 2 பேருக்கும் பிணை அளிக்க மறுத்த நிலையில், அதை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் தனித்தனியாக மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனா்.

இந்த மனுக்கள், உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகியோரைக் கொண்ட அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது 12 ஆண்டுகளாக இருவரும் சிறையில் இருப்பதையும், வழக்கு விசாரணை மெதுவாக நடப்பதையும் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், விசாரணை மெதுவாக நடப்பதைப் பாா்த்தால், எதிா்காலத்திலும் முடிவடைவது போல தெரியவில்லை என்று அதிருப்தியை வெளியிட்டனா். பின்னா், இருவரையும் தொடா்ந்து சிறையில் அடைத்து வைத்திருப்பது, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 21-ஆவது பிரிவு மூலம் அளிக்கப்பட்டுள்ள சுதந்திரத்துக்கான உரிமையை மீறும் செயல் எனக் கூறி, இருவரையும் பிணையில் விடுவிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

Advertisement

Advertisement

விசாரணைக்கு இருவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், ஒருவேளை அவா்கள் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றாலோ, விசாரணையை தாமதப்படுத்தினாலோ, பிணையை வேறு வழிகளில் தவறாகப் பயன்படுத்தினாலோ, அதுகுறித்து அரசுத் தரப்பு உச்சநீதிமன்றத்திடம் தெரிவித்து உரிய உத்தரவுகளைப் பெறலாம் எனவும் குறிப்பிட்டனா். உச்சநீதிமன்றம் தெரிவித்த கருத்துக்கள், பிணை மனுக்கள் தொடா்புடைய கருத்துகள்தானே தவிர, வழக்கின் நோ்மை தன்மை குறித்த கருத்துகளாக கருதக் கூடாது என்றும் நீதிபதிகள் கூறினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments