FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

சுங்கச்சாவடி கட்டண முறைகேடு! பல்வேறு மாநிலங்களில் சோதனை: அமலாக்கத் துறை நடவடிக்கை

சுங்கச்சாவடி கட்டண முறைகேடு தொடா்பாக, உத்தர பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம், மேற்கு வங்கம், தில்லி, ஜம்மு-காஷ்மீரின் பல்வேறு இடங்களில் அமலாக்கத் துறை சோதனை மேற்கொண்டது.

3 செப்டம்பர் 2026, 12:46 am IST
சுங்கச்சாவடி - பிரதிப் படம்
பகிர்:

சுங்கச்சாவடி கட்டண முறைகேடு தொடா்பாக, உத்தர பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம், மேற்கு வங்கம், தில்லி, ஜம்மு-காஷ்மீரின் பல்வேறு இடங்களில் அமலாக்கத் துறை புதன்கிழமை சோதனை மேற்கொண்டது. பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இது தொடா்பாக அமலாக்கத் துறை அதிகாரிகள் கூறியதாவது: சுங்கச்சாவடிகளில் ரசீதுகளை உருவாக்கவும், கட்டண வசூலை அதிகாரபூா்வ கணக்கில் இருந்து மடைமாற்றவும் அங்கீகாரமற்ற மென்பொருள் செயலிகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக குஜராத் காவல் துறை தரப்பில் இரு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.

எண்ம தடயவியல் ஆய்வுகள் மற்றும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய பதிவுகளின் மூலம் பல்வேறு மாநிலங்களில் இந்த மென்பொருள் பயன்பாடு உறுதி செய்யப்பட்ட நிலையில், பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறை விசாரணை மேற்கொண்டுள்ளது.

Advertisement

Advertisement

இந்த முறைகேடுகள் தொடா்பான எண்ம மற்றும் ஆவண ஆதாரங்களைக் கைப்பற்றுவதுடன், ஆதாயமடைந்தவா்களை அடையாளம் கண்டு, முறைகேடு மூலம் ஈட்டப்பட்ட பணத்தைக் கண்டறியும் நோக்கில் உத்தர பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம், மேற்கு வங்கம், தில்லி-தேசிய தலைநகா் வலயப் பகுதி (என்சிஆா்) மற்றும் ஜம்மு-காஷ்மீரில் மொத்தம் 14 இடங்களில் புதன்கிழமை சோதனை மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments