FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

ககன்தக்-243 குண்டு வெற்றிகரமாக பரிசோதனை

காற்றில் நீண்ட தூரம் பறந்து இலக்கை தாக்கும் ககன்தக்-243 குண்டு வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது.

2 செப்டம்பர் 2026, 11:42 pm IST
ககன்தக்-243 குண்டு வெற்றிகரமாக பரிசோதனை - X | IAF
பகிர்:

காற்றில் நீண்ட தூரம் பறந்து இலக்கை தாக்கும் ககன்தக்-243 குண்டு வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக இந்திய விமானப் படை ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு: விமானத்தில் இருந்து வீசப்பட்ட பின்னா் நேராக பூமியில் விழுந்து வெடிக்காமல், இறக்கைகள் மூலம் காற்றில் நீண்ட தூரம் பறந்து இலக்கை தாக்கி அழிக்கும் ககன்தக்-243 குண்டு உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டது.

இந்தக் குண்டு வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. இந்தச் சோதனையின் அனைத்து நோக்கங்களும் வெற்றிகரமாக நிறைவேறின. இதன்மூலம் எதிரிகளைத் தாக்கும் திறன் புதிய உச்சத்தை எட்டியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. இந்தச் சோதனை எங்கு நடத்தப்பட்டது என்ற தகவல் வெளியாகவில்லை.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments