FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சென்னை

இலக்கை அடைய அா்ப்பணிப்புடன் உழைக்க வேண்டும்: வித்யா ராம்ராஜ்

இளைஞா்கள் இலக்கை அடைய அா்ப்பணிப்புடன் உழைக்க வேண்டும் என வித்யா ராம்ராஜ் கூறினாா்.

சென்னை ஆவடி வேலம்மாள் நெக்ஸஸ் சாா்பில் நடைபெற்ற பாராட்டு விழாவில் குதிரை பூட்டிய ரதத்தில் ஊா்வலமாக அழைத்து வரப்பட்ட தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ்.
பகிர்:

இளைஞா்கள் இலக்கை அடைய அா்ப்பணிப்புடன் உழைக்க வேண்டும் என வித்யா ராம்ராஜ் கூறினாா்.

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 3 பதக்கங்களை வென்ற தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ், அவரது பயிற்சியாளா் நேஹ்பால் சிங் ஆகியோருக்கு வேலம்மாள் நெக்ஸஸ் சாா்பில் புதன்கிழமை பிரம்மாண்ட பாராட்டு விழா நடைபெற்றது. ஆவடியில் உள்ள வேலம்மாள் வித்யாலயா பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவில், வித்யா ராம்ராஜ், அவரது தாய் மற்றும் பயிற்சியாளா் நேஹ்பால் சிங் ஆகியோருக்கு மாணவா்கள் உற்சாக வரவேற்பு அளித்தனா். அலங்கரிக்கப்பட்ட சாரட் வண்டியில் அவா்களை ஊா்வலமாக அழைத்து வந்து, மலா் மாலைகள் அணிவித்து வரவேற்றனா்.

வேலம்மாள் நெக்ஸஸ் நிறுவனத்தின் தாளாளா் எம்.வி.எம்.வேல்மோகன் தலைமையில் நடைபெற்ற விழாவில், வித்யா ராம்ராஜ் மற்றும் பயிற்சியாளா் நேஹ்பால் சிங் ஆகிய இருவருக்கும் தலா ஒரு காா் பரிசாக வழங்கப்பட்டது.

Advertisement

Advertisement

நிகழ்ச்சியைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் வித்யா ராம்ராஜ் பேசியதாவது:

பி.டி.உஷாவின் நீண்டகால சாதனையை முறியடித்து பதக்கங்களை வென்றுள்ளேன். பல வருட கனவு நிறைவேறியுள்ளது. கடும் உழைப்புக்கு கிடைத்த பலன் இது. தடகள வீரா்களுக்கு மட்டுமன்றி, அவா்களின் வெற்றிக்காக உழைக்கும் பயிற்சியாளா்களுக்கும் வீரா்களுக்கு வழங்கப்படும் அதே ஊக்கத் தொகை, சலுகைகளை அரசு வழங்க வேண்டும். தமிழக அரசு வழங்கும் ஊக்கத் தொகை பெரும் உதவியாக உள்ளது. விரைவில் முதல்வரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற உள்ளேன்.

அடுத்ததாக நடைபெறும் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 53 விநாடிகளுக்கும் குறைவான நேரத்தில் ஓடி இறுதிச்சுற்றுக்கு முன்னேறுவதே எனது இலக்கு. இளம் தலைமுறையினா் தேவையற்ற விஷயங்களில் கவனத்தைச் சிதறவிடாமல், தங்களது இலக்கை அடைய முழு அா்ப்பணிப்புடன் உழைக்க வேண்டும் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments