FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஆசிய விளையாட்டு: தடை தாண்டுதலில் வெண்கலம் வென்ற தமிழக வீராங்கனை!

தடை தாண்டுதலில் தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது குறித்து...

வித்யா ராம்ராஜ். - படம் - எக்ஸ்
பகிர்:

தடை தாண்டுதலில் தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ் திங்கள்கிழமை (செப். 28) வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

ஜப்பானின் நாகோயாவில் 20-ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியாவைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்த தொடரில் இந்தியா, ஜப்பான், சீனா, தென்கொரியா, தாய்லாந்து உள்பட 45 நாடுகளைச் சேர்ந்த சுமார் 11,000 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

Advertisement

Advertisement

இன்று நடைபெற்ற மகளிர் 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டப்பந்தய இறுதிப் போட்டியில் தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ் வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.

400 மீட்டர் தடை தாண்டும் போட்டியில் 54.75 விநாடிகளில் தனது இலக்கை நிறைவு செய்ததன்மூலம் மூன்றாம் இடத்தைத் தக்கவைத்தார்.

நடப்பாண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் மொத்தம் 41 பதக்கங்களுடன் இந்தியா 12 ஆவது இடத்திலும் 225 பதக்கங்களுடன் சீனா முதல் இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

Tamil Nadu athlete Vithya Ramraj won a bronze medal in the hurdles event on Monday (Sept. 28).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments