குட்கா கடத்தியவர்களை 40 கி.மீ. தூரம் காரில் தொங்கியபடி சென்று மடக்கிப் பிடித்த காவல்துறை!
குட்கா கடத்தியவர்களை 40 கி.மீ. தூரம் காரில் தொங்கியபடி சென்று காவல்துறையினர் மடக்கிப் பிடித்தது குறித்து...
குட்கா கடத்திய வடமாநில இளைஞர்களை 40 கி.மீ. தூரம் காரில் தொங்கியபடி சென்று காவல்துறையினர் மடக்கிப் பிடித்துள்ளனர்.
கோவை மாவட்டம், கோவில்பாளையம் காவல்துறையினர் விளாங்குறிச்சி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கர்நாடகா மாநில பதிவு எண் கொண்ட ஒரு காரை சோதனையிட முயன்ற போது அந்தக் காரின் பின்பகுதியில் மூட்டைகள் இருப்பது தெரிய வந்தது. அவற்றை சோதனை செய்ய எஸ்.ஐ விக்னேஷ் மற்றும் தலைமை காவலர் வேல்முருகன் ஆகியோர் முயன்ற போது அந்த காரில் வந்த மூன்று நபர்கள் எஸ்.ஐ. விக்னேஷை கீழே தள்ளிவிட்டு காரில் ஏறி தப்ப முயன்றனர்.
அப்போது தலைமை காவலர் வேல்முருகன் சுதாரித்து அந்த காரின் மேற்பகுதியில் பாய்ந்து படுத்துள்ளார். இருப்பினும் அந்தக் கடத்தல்காரர்கள், அந்தக் காரை விளாங்குறிச்சியில் இருந்து காளப்பட்டி வழியாக அவிநாசி சாலையை வந்தடைந்து அங்கிருந்து நீலாம்பூர், கணியூர், கருமத்தம்பட்டி, தெக்கலூர் அவிநாசி வரை பைபாஸ் சாலையில் காரை நிறுத்தாமல் சென்றுள்ளனர். இருப்பினும் தலைமை காவலர் வேல்முருகன் சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவிற்கு அந்தக் காரின் மேல் படுத்தபடியே சென்றுள்ளார்.
Advertisement
Advertisement
இது குறித்து நீலாம்பூர், கருமத்தம்பட்டி, அவிநாசி காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவிநாசி பகுதியில் உள்ள தனியார் ஹோட்டல் முன்பு அந்த வாகனத்தை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அந்த வாகனத்தில் வந்த மூன்று பேரையும் போலீசார் மடக்கிப்பிடித்து வாகனத்தை சோதனை செய்த போது அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் கடத்திவரப்பட்டது தெரியவந்தது.
இந்த நிலையில் அவர்கள் மூன்று பேரையும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் கோவில்பாளையம் போலீசார் காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர்.
அங்கு அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து குட்கா பொருட்களை கடத்தி வந்து கோவை பகுதிகளில் விற்பனை செய்வதும் தெரியவந்தது. இந்த சூழலில் அவர்கள் மூன்று பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Police intercepted and apprehended youths smuggling Gutkha after clinging to their car for a distance of 40 km.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.