FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

காரின் கூரையில் படுத்தவாறு 40 கி.மீ. சென்று குட்கா கடத்தல் கும்பலை பிடித்த காவலருக்கு விருது வழங்க கோரிக்கை!

காரின் கூரையில் படுத்தவாறு 40 கி.மீ. துரத்திச் சென்று குட்கா கடத்தல் கும்பலை பிடித்த காவலருக்கு விருது வழங்கி கௌரவிக்க வேண்டும் என அன்புமணி கோரிக்கை விடுத்தது குறித்து...

காரின் மேற்கூரையில் படுத்தவாறு சென்ற தலைமைக் காவலர் வேல்முருகன். - படம் - தினமணி, எக்ஸ்
பகிர்:

காரின் கூரையில் படுத்தவாறு 40 கி.மீ. துரத்திச் சென்று குட்கா கடத்தல் கும்பலை பிடித்த காவலருக்கு விருது வழங்கி கௌரவிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

காரின் கூரையில் படுத்தவாறு 40 கி.மீ துரத்திச் சென்று குட்கா கடத்தல் கும்பலை பிடித்த காவலரின் துணிச்சல் பாராட்டத்தக்கது; விருது வழங்கி கௌரவிக்க வேண்டும்!

Advertisement

Advertisement

கோவை மாவட்டம், விளாங்குறிச்சி பகுதியில் காரில் குட்கா கடத்தி வந்த கும்பலை, அந்தக் காரின் மேற்கூரை மீது பாய்ந்து படுத்தபடியே 40 கி.மீ. தொலைவுக்கு துரத்திச் சென்று பிடித்த கோவில்பாளையம் காவல் நிலைய தலைமை காவலர் வேல்முருகனின் துணிச்சலும், கடமை உணர்வும் பாராட்டத்தக்கவை.

உயிரை துச்சமென மதித்து செயல்பட்ட காவலர் வேல்முருகன் குற்றங்களையும், கடத்தல்களையும் தடுப்பதில் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக மாறியிருக்கிறார். அவருக்கு எனது வாழ்த்துகள். தலைமைக் காவலர் வேல்முருகனின் கடமை உணர்வை அங்கீகரிக்கும் வகையில் அவருக்கு தமிழக அரசு விருது வழங்கி கௌரவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று அன்புமணி குறிப்பிட்டுள்ளார்.

summary

PMK leader Anbumani Ramadoss has urged that the police officer who apprehended a gutkha smuggling gang after chasing them for 40 km while lying on the roof of a car be honored with an award.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments