FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கடவுள் என்னைத் தேர்ந்தெடுத்தார்! அயோத்தி புதிய அறங்காவலர் நிர்மலா நெகிழ்ச்சி!

அயோத்தி அறக்கட்டளை புதிய உறுப்பினர் நிர்மலா யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டதைப் பற்றி..

3 செப்டம்பர் 2026, 1:04 pm IST
நிர்மலா யாதவ் - X
பகிர்:

கடவுள் இந்தப் பதவிக்குத் தன்னைத் தேர்ந்தெடுத்ததாக அயோத்தியில் அமைந்துள்ள ஸ்ரீ ராம ஜன்ம பூமி தீர்த்த சேத்திர அறக்கட்டளையின் புதிய உறுப்பினர் டாக்டர். நிர்மலா யாதவ் தெரிவித்தார்.

இந்த அறக்கட்டளைக்கு முதல் தலைமை செயல் அதிகாரியாக (சிஇஓ) ஓய்வுபெற்ற ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் கல்வியாளர் நிர்மலா யாதவ், வழக்குரைஞர் மதன் மோகன் பாண்டே மற்றும் தொழிலதிபரும் சமூக சேவகருமான மகேஷ் பக் சந்த்கா ஆகிய மூவரையும் புதிய அறங்காவலர்களாக இணைத்தது.

கடந்தாண்டு பிம்லேந்திர மோகன் மிஷ்ராவின் மறைவு மற்றும் நன்கொடை முறைகேடு சர்ச்சை காரணமாக முன்னாள் பொதுச் செயலாளர் சம்பத் ராய் மற்றும் அனில் மிஷ்ரா ஆகியோர் பதவி விலகியதைத் தொடர்ந்து இந்த மூன்று இடங்களும் காலியானது.

Advertisement

Advertisement

இது தொடர்பாகச் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,

நாடு முடிவதிலுமிருந்து நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன். இது கடவுள் என்னைத் தேர்ந்தெடுத்தற்கான அறிகுறியாகும். அவருடைய திருவுள்ளம் மற்றும் அருளின்றி எதுவும் சாதியமில்லை. நான் தேர்ந்தெடுக்கப்பட்டதில் வேறு யாருக்கும் எந்தப் பங்கும் இல்லை. கடவுளின் அருள் என் குடும்பத்தின் மீதும் என் மீதும் தொடர்ந்து இருந்துவருகிறது. மேலும், தனது தேர்வு பெண் சக்தி பிரதிநிதித்துவம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அறங்காவலராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில், தனது கொள்ளைகளில் எந்தவித சமரசமும் செய்யாமல் முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றுவேன்.

நிர்வாகம், ஏற்பாடுகள், வசதிகள், பாதுகாப்பு என எதுவாக இருந்தாலும், மேம்பாடுகளுக்கான எனது ஆலோசனைகளை வழங்குவேன். மேலும் ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்ய முயற்சிப்பேன். பால ராமரிடம் தனதுக்கு அழைப்பு வந்துள்ள நிலையில், நான் முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றுவேன்.

முன்னாள் கல்லூரி முதல்வரும் கல்வியாளருமான நிர்மலா யாதவ், பல தசாப்தங்களாகக் கல்வி மற்றும் சமூக அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றி வருவதாக அவர் கூறினார்.

Newly appointed member of the Shri Ram Janmabhoomi Teerth Kshetra Trust, Dr Nirmala Yadav, on Thursday said god chose her for the post and expressed her readiness to discharge the responsibility with "dedication, hard work and honesty".

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments