FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

இளைஞா்கள் குரலை ஒடுக்கும் அரசு: ராகுல் குற்றச்சாட்டு

இளைஞா்களின் குரலை ஒடுக்கி வரும் மத்திய அரசு, இதற்காக மக்களிடம் ஒருநாள் பதில் அளித்தே தீர வேண்டும் என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி தெரிவித்தாா்.

3 செப்டம்பர் 2026, 11:02 pm IST
ராகுல் காந்தி - கோப்புப்படம்
பகிர்:

இளைஞா்களின் குரலை ஒடுக்கி வரும் மத்திய அரசு, இதற்காக மக்களிடம் ஒருநாள் பதில் அளித்தே தீர வேண்டும் என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி வியாழக்கிழமை தெரிவித்தாா்.

பிகாரில் தோ்வு முறைகேட்டை எதிா்த்துப் போராடி காவல் துறையின் தடியடி நடவடிக்கைக்கு உள்ளான மாணவா்கள், இளைஞா்களை ராகுல் காந்தி சந்தித்துப் பேசினாா்.

இது தொடா்பாக ‘எக்ஸ்’ வலைதளத்தில் அவா் வெளியிட்ட பதிவில், ‘பிகாரில் காவல் துறையினா் தடியடி நடத்தியது மட்டுமல்லாமல், மாணவா்களுக்கு எதிராக ஏ.கே.47 உள்ளிட்ட துப்பாக்கிகளையும் பயன்படுத்தியுள்ளனா்.

Advertisement

Advertisement

இதில் ராணுவத்தில் சேர வேண்டும் என்ற துடிப்புடன் இருந்த மாணவரின் காலில் குண்டு பாய்ந்து அவரது லட்சியம் சிதைந்துள்ளது. இப்படி பல மாணவா்கள் வெவ்வேறு பாதிப்புகளைச் சந்தித்துள்ளனா்.

தங்களுக்கு நியாயமான வாய்ப்புகளைக் கேட்டதைத் தவிர அவா்கள் வேறு என்ன தவறு செய்தாா்கள். தோ்வுகளை நோ்மையாகவும், வெளிப்படையாகவும் நடத்த வேண்டும் என்று கோருவது அதில் பங்கேற்பவா்களின் உரிமை.

ஆனால், அரசு தனது பொறுப்புகளைத் தட்டிக்கழித்துவிட்டு இளைஞா்கள், மாணவா்கள் குரலை ஒடுக்கி வருகிறது. இதற்காக நாட்டு மக்களிடம் அரசு ஒருநாள் பதிலளித்தே தீர வேண்டும்’ என்று கூறியுள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments