மாணவர்களுக்கு போதைப்பொருள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்: பிரதமர் வலியுறுத்தல்!
போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடையே ஏற்படுத்த வேண்டும் என தேசிய நல்லாசிரியர் விருதாளர்களுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தியது குறித்து...
போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடையே ஏற்படுத்த வேண்டும் என தேசிய நல்லாசிரியர் விருதாளர்களுக்கு பிரதமர் மோடி சனிக்கிழமை (செப். 5) வலியுறுத்தினார்.
முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் சர்பவள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான இன்று, நாடு முழுவதும் ஆசிரியர் நாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதனிடையே, தில்லியில் தேசிய நல்லாசிரியர் விருதாளர்களை தனது வீட்டில் சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி, அவர்களிடையே உரையாற்றியதாவது:
Advertisement
Advertisement
செல்போன், லேப்டாப் போன்ற பொருள்களின் மூலம் மாணவர்கள் திரையில் அதிக நேரத்தை செலவிடுவது ஒருவிதமான அடிமைத்தனமாக உள்ளது. அந்த அடிமைத்தனம் நீங்க வேண்டுமென்றால், மாணவர்கள் விளையாட்டுகளில் தங்கள் கவனத்தச் செலவிட வேண்டும். நான் சொல்வது விடியோ கேம் விளையாட்டை அல்ல; களத்தில் விளையாடும் விளையாட்டை சொல்கிறேன்.
நாம் நமது மாணவர்களை ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபடுத்த வேண்டும். ஆடை ஒழுங்கு பிரச்னைகளைப் பொறுத்தவரை, சில பெருநகரங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் உள்ள ஆடை விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு குறைவாகவே உள்ளது; சில நேரங்களில் எந்த விளக்கமும் இன்றி விதிகள் திணிக்கப்படுகின்றன.
இதுமாதிரியான பிரச்னைகளில் ஆசிரியர்கள் தொடர்ந்து விழிப்புடன் இருப்பதோடு, இதனால் மாணவர்களின் நடவடிக்கைகளில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்பதையும் கவனிக்க வேண்டும். மேலும், மாணவர்களிடையே போதைப்பொருள் விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும்.
ஒட்டுமொத்த ஆசிரியர் சமுதாயத்துக்கும் நான் கூறுவது என்னவென்றால், பாடப்புத்தகம் மற்றும் பாடத்திட்டத்தைத் தாண்டி மாணவர்களின் வாழ்க்கையுடன் ஒன்றினைய வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
Prime Minister Modi on Saturday (September 5) urged the teachers shortlisted for the National Award to create awareness among students about drugs.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.