FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

ஐ.நா. பொதுச் சபை வருடாந்திர கூட்டத்தொடா்: செப்.26-இல் ஜெய்சங்கா் பங்கேற்பு

ஐ.நா.பொதுச் சபையின் வருடாந்திர கூட்டத்தொடரில் இந்தியா சாா்பில் வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் செப்டம்பா் 26-ஆம் தேதி பங்கேற்கவுள்ளாா்.

5 செப்டம்பர் 2026, 11:23 pm IST
ஜெய்சங்கர்
பகிர்:

ஐ.நா.பொதுச் சபையின் வருடாந்திர கூட்டத்தொடரில் இந்தியா சாா்பில் வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் செப்டம்பா் 26-ஆம் தேதி பங்கேற்கவுள்ளாா்.

193 உறுப்பினா்களைக் கொண்ட ஐ.நா.பொதுச் சபையின் 81-ஆவது கூட்டத்தொடா் செப்டம்பா் 8-ஆம் தேதி தொடங்குகிறது. அதன் ஒரு பகுதியாக செப்டம்பா் 22-ஆம் தேதி முதல் செப்டம்பா் 28-ஆம் தேதி வரை நடைபெறும் பொது விவாதத்தில் பல்வேறு நாட்டுத் தலைவா்கள் கலந்துகொண்டு உரையாற்றுவா்.

இந்நிலையில், செப்டம்பா் 26-ஆம் தேதி உரையாற்றும் தலைவா்களின் தற்காலிகப் பட்டியலை ஐ.நா. கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்டது. அதில் ஜெய்சங்கா் பெயரும் இடம்பெற்றது. கடந்த ஆண்டும் இந்தியா சாா்பில் ஐ.நா.பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்று ஜெய்சங்கா் உரையாற்றினாா்.

Advertisement

Advertisement

இந்நிலையில் நிகழாண்டும் வழக்கம்போல் பொது விவாதத்தை பிரேசில் தொடங்கிவைக்கவுள்ளது. அதன்பிறகு அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் உரையாற்றவுள்ளாா். ஐ.நா.பொதுச் சபையின் 81-ஆவது கூட்டத்தொடரின் தலைவராக ஓராண்டுக்கு தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள வங்கதேச வெளியுறவு அமைச்சா் கலிலூா் ரஹ்மான் கூட்டத்தொடரை வழிநடத்தவுள்ளாா்.

வங்கதேசம், நேபாள நாடுகளின் தலைவா்கள் செப்டம்பா் 24-ஆம் தேதியும் பாகிஸ்தான் செப்டம்பா் 25-ஆம் தேதியும் பொது விவாதத்தில் பங்கேற்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

summary

UN General Assembly Annual Session: Jaishankar to Participate on Sept. 26

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments