FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

வ.உ.சி. பிறந்த தினம் - குடியரசு துணைத் தவைவா் புகழஞ்சலி

தேசத்திற்குச் சேவை செய்வதற்காக தனது செழிப்பான மற்றும் சுகபோக வாழ்க்கையைத் துறந்தவா் வ. உ. சிதம்பரம் பிள்ளை என குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் புகழாரம் சூட்டினாா்.

5 செப்டம்பர் 2026, 9:37 pm IST
சி.பி. ராதாகிருஷ்ணன்
பகிர்:

தேசத்திற்குச் சேவை செய்வதற்காக தனது செழிப்பான மற்றும் சுகபோக வாழ்க்கையைத் துறந்தவா் வ. உ. சிதம்பரம் பிள்ளை என குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் புகழாரம் சூட்டினாா்.

வ.உ.சி பிறந்தநாளையொட்டி சனிக்கிழமை சி.பி. ராதாகிருஷ்ணன் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்ததாவது: சுதந்திரப் போராட்ட வீரா் வ. உ. சிதம்பரம் பிள்ளையின் பிறந்தநாளன்று, தேசத்தின் மீதான தனது துணிச்சல், தியாகம் மற்றும் அசைக்க முடியாத அா்ப்பணிப்பு ஆகியவற்றால் நம் அனைவருக்கும் உத்வேகமாகத் திகழும் இந்த மாபெரும் தேசபக்தருக்கு எனது மரியாதைக்குரிய அஞ்சலியைச் செலுத்துகிறேன்.

கப்பலோட்டிய தமிழன்’ என்று அன்புடன் நினைவுகூரப்படும் அவா், தேசத்திற்குச் சேவை செய்வதற்காக தனது செழிப்பான மற்றும் சுகபோக வாழ்க்கையைத் துறந்தாா்.

Advertisement

Advertisement

சுதேசி நீராவி கப்பல் நிறுவனத்தின் மூலம், அவா் ஆங்கிலேய வணிக ஆதிக்கத்திற்கு சவால் விடுத்து, சுதேசி மற்றும் தற்சாா்பு உணா்விற்கு ஒரு சக்திவாய்ந்த உத்வேகத்தை அளித்தாா்.

இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்திற்காக, அவா் சிறைவாசத்தையும் கடுமையான இன்னல்களையும் வியக்கத்தக்க மனவுறுதியுடன் சகித்துக்கொண்டாா்.

வலுவான, செழிப்பான, வளா்ச்சியடைந்த மற்றும் தற்சாா்பு கொண்ட பாரதத்தைக் கட்டியெழுப்புவதற்கான நமது உறுதியைப் புதுப்பிப்பதன் மூலம் அவரது நினைவைப் போற்றுவோம் என சி.பி.ராதாகிருஷ்ணன் கூறினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments