FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

பிரிக்ஸ் உச்சிமாநாடு: ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் ஒத்திவைப்பு

பிரிக்ஸ் கூட்டமைப்பின் உச்சிமாநாடு செப்.12, 13 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள நிலையில், சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சில் கூட்டம் அக்டோபருக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

7 செப்டம்பர் 2026, 3:20 am IST
பகிர்:

பிரிக்ஸ் கூட்டமைப்பின் உச்சிமாநாடு செப்.12, 13 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள நிலையில், சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சில் கூட்டம் அக்டோபருக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், இந்தோனேசியா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் பிரிக்ஸ் கூட்டமைப்பின் வருடாந்திர உச்சிமாநாடு, தில்லியில் செப்.12, 13 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இதையொட்டி, சா்வதேச நாடுகளின் தலைவா்கள் இந்தியாவுக்கு வருகை தரவுள்ளனா். மேற்காசிய பிரச்னையால் எழுந்துள்ள பொருளாதார பிரச்னைகள் உள்பட சா்வதேச சவால்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

இந்தச் சூழலில், தில்லியில் செப்.12-ஆம் தேதி நடத்த திட்டமிட்டிருந்த ஜிஎஸ்டி கவுன்சிலின் 57-ஆவது கூட்டம் அக். 7-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் மாநில நிதியமைச்சா்களை உள்ளடக்கிய ஜிஎஸ்டி கவுன்சிலின் முந்தைய கூட்டம், கடந்த ஆண்டு செப்.3-4 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. அப்போது, ஜிஎஸ்டி விகிதங்களைக் குறைக்கும் முக்கிய முடிவு மேற்கொள்ளப்பட்டது.

Advertisement

Advertisement

அதன்படி, 5, 12, 18, 28 சதவீதமாக இருந்த ஜிஎஸ்டி விகிதங்கள், 5 மற்றும் 18 சதவீதமாக குறைக்கப்பட்டன. அத்துடன், உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் பொருள்களுக்கு 40 சதவீத வரி விகிதம் அறிவிக்கப்பட்டது.

தற்போதைய ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், மாதம் ரூ.2.5 லட்சத்துக்கு மேல் உள்ளீட்டு வரி திரும்பப் பெறும் பெரிய நிறுவனங்களுக்கான பதிவு நடைமுறையை எளிமைப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

முந்தைய ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தின்போது, மாதம் ரூ.2.5 லட்சத்துக்குள் உள்ளீட்டு வரி திரும்பப் பெறும் சிறிய நிறுவனங்களுக்கான பதிவு நடைமுறையை எளிமைப்படுத்த ஒப்புதல் வழங்கப்பட்டு, கடந்த நவ.1-ஆம் தேதி முதல் அமலாக்கப்பட்டது. தற்போது ஜிஎஸ்டி அமைப்புமுறையின்கீழ் 1.68 கோடி நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments