செப். 12, 13-ல் பிரிக்ஸ் உச்சிமாநாடு: 400 பேர் குழுவுடன் சீன அதிபர் பங்கேற்பு
தில்லியில் இந்தியா தலைமையிலான பிரிக்ஸ் உச்சிமாநாடு நடைபெறுவது குறித்து...
இந்தியா தலைமையிலான பிரிக்ஸ் உச்சிமாநாடு, வருகிற செப். 12, 13 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
18-வது பிரிக்ஸ் உச்சிமாநாடு, இந்தியா தலைமையில் தில்லியில் நடைபெறவுள்ளது. பிரிக்ஸ் அமைப்பில் பிரேசில் ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், சௌதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகள் முழு உறுப்பினர்களாகவும், பெலாரஸ், பொலிவியா, கஜகஸ்தான், கியூபா, மலேசியா, நைஜீரியா, துருக்கி, உகாண்டா, உஸ்பெகிஸ்தான், வியத்நாம் உள்ளிட்ட நாடுகள் கூட்டமைப்பு நாடுகளாகவும் உள்ளன.
2012, 2016, 2021-ல் பிரிக்ஸ் அமைப்புக்கு இந்தியா தலைமை வகித்த நிலையில், இந்தாண்டிலும் இந்தியாவே தலைமை வகிக்கிறது. இந்த உச்சிமாநாட்டில் போர் மற்றும் அமைதி, புவிசார் அரசியல், பொருளாதார ஆளுகை உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், இந்தாண்டில் தில்லியில் செப். 12, 13 ஆகிய தேதிகளில் பிரிக்ஸ் உச்சிமாநாடு நடைபெறும் என வெளியுறவு அமைச்சகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
மேலும், இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, 7 ஆண்டுகளுக்குப் பிறகு சீன அதிபர் ஜின்பிங், இந்தியாவுக்கு வருகை தருகிறார். அதுமட்டுமின்றி, கடந்த முறை (2019) இந்தியாவுக்கு ஜின்பிங், 200-க்கும் குறைவான அதிகாரிகள் குழுவுடன் வருகை தந்தார். ஆனால், இந்த முறை சுமார் 400 பேர் கொண்ட குழுவுடன் அவர் இந்தியாவுக்கு வருகை தருவார் எனக் கூறப்படுகிறது.
India to host 2-day BRICS leaders’ summit next month
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.