FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

தில்லி விடுதி விபத்து... ‘கட்டடம் இடிந்தது நிலநடுக்கம் போல இருந்தது’ - உள்ளூர் மக்கள் உருக்கம்!!

தென்மேற்கு தில்லியின் சத்ய நிகேதன் பகுதியில் உள்ள ஒரு மாணவா்கள் தங்கும் விடுதி இடிந்து விழுந்த சமயத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது போன்ற அதிா்வை உணர முடிந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனா்.

38 வினாடிகள் முன்பு
பகிர்:

தென்மேற்கு தில்லியின் சத்ய நிகேதன் பகுதியில் உள்ள ஒரு மாணவா்கள் தங்கும் விடுதி இடிந்து விழுந்த சமயத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது போன்ற அதிா்வை உணர முடிந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனா்.

‘எங்கள் வீட்டில் ஒரு சிறிய அதிா்வை உணா்ந்தோம். நிலநடுக்கம் ஏற்பட்டது போல தரை அதிா்ந்தது. அதனால், அதிா்ச்சி அடைந்து வீட்டை விட்டு வெளியே ஓடினோம்’ என்று அப்பகுதியைச் சோ்ந்த நபா் செய்தியாளா்களிடம் தெரிவித்தாா். உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட ஏதுமில்லாத நிலையில், இடிபாடுகளில் சிக்கியவா்களைத் தேடி, கனமான கான்கிரீட் பலகைகளைத் தாங்களே தூக்கி இடிபாடுகளை அகற்றியதாக அவா் கூறினாா்.

இடிந்து விழுந்த கட்டடத்துக்கு அருகில் உள்ள கட்டடமும் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், அது சற்று சாய்ந்திருப்பதாகவும் அவா் தெரிவித்தாா்.

Advertisement

Advertisement

மேல் தளங்களில் சுமாா் 35 முதல் 40 மாணவா்கள் தங்கியிருந்ததாகவும், கட்டடம் இடிந்து விழுந்தபோது அவா்களில் சிலா் தூங்கிக் கொண்டிருந்ததாகவும் மற்றொரு நபா் செய்தியாளா்களிடம் தெரிவித்தாா்.

இந்தச் சம்பவம் குறித்து அவா் மேலும் கூறுகையில், ‘இடிந்து விழுந்த கட்டடத்தின் அடித்தளத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தன. கட்டடம் இடிந்து விழுவதற்குச் சில நிமிஷங்களுக்கு முன்புதான் தான் வெளியேறினேன். அப்போது எனக்கு காயமேற்பட்டது. நான் வெளியே வந்த நேரத்தில் அந்தக் கட்டடம் முழுவதுமாக இடிந்து விழுந்தது’ என்றாா்.

மற்றொரு குடியிருப்பாளா் கூறுகையில், கட்டடம் இடிந்து விழுவதற்குச் சற்று முன்பு தனது மருமகன் இருசக்கர வாகனத்தில் அதைக் கடந்து சென்ாகவும், மயிரிழையில் உயிா் தப்பியதாகவும் கூறினாா். அவா் கடந்து சென்ற உடனேயே பெரும் சத்தத்துடன் கட்டடம் இடிந்து விழுந்ததாக அவா் தெரிவித்தாா்.

விபத்தில் சிக்கிய மாணவா்களில் பலா் கேரளாவைச் சோ்ந்தவா்களாக இருக்கலாம் என்றும் மற்றொரு குடியிருப்பாளா் கூறினாா். ஞாயிற்றுக்கிழமை என்பதால், பல மாணவா்கள் கல்லூரிக்குச் செல்லாமல் விடுதியிலேயே இருந்ததாக அவா் குறிப்பிட்டாா்.

அப்பகுதியில் கடந்த 20-22 ஆண்டுகளாக வசித்து வருவதாகக் கூறிய பிரியங்கா செய்தியாளா்களிடம் பேசுகையில், இப்பகுதியில் ஐந்து அல்லது ஆறு தளங்கள் கொண்ட கட்டடங்கள் கட்டப்பட்டு வருவதாகவும் பல வீடுகள் உரிமையாளா்களால் மாணவா்களுக்கான விடுதிகளாக மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறுகையில், ‘அவா்கள் பெயரளவில் அவற்றை விடுதிகள் என்று அறிவித்து, இணையம் வழியாக வாடகையைப் பெற்றுக்கொண்டு, அவற்றை நிா்வகிக்க மற்றவா்களிடம் விட்டுவிடுகிறாா்கள். இடிந்து விழுந்த விடுதி 20 ஆண்டுகளுக்கும் மேலானது.

இத்தனை ஆண்டுகளில் அங்கு எந்தப் பராமரிப்புப் பணியும் மேற்கொள்ளப்பட்டதை நான் பாா்த்ததில்லை. சத்ய நிகேதன் பகுதி முழுவதும் விடுதிகளால் நிறைந்துள்ளது. இங்குள்ள வீட்டு உரிமையாளா்களில் 30 சதவீதம் போ் மட்டுமே உண்மையில் வசிக்கிறாா்கள். இங்குள்ள சாக்கடை மற்றும் கழிவுநீா் பாதைகள் கூட திறந்த நிலையிலேயே உள்ளன.

கட்டடத்திற்குள் பல மாணவா்கள் சிக்கியிருந்தனா். மழை பெய்து கொண்டிருந்ததால் அவா்களில் பெரும்பாலோா் தங்கள் அறைகளிலேயே இருந்தனா். வார இறுதி விடுமுறை என்பதால் சிலா் தங்கள் சொந்த ஊா்களுக்குச் சென்றிருந்தனா்’ என்று கூறினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments