FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

நடப்பு நிதியாண்டில் மேலும் 250 கிளைகள் புதிதாக 12,000 பணியாளா்கள்: எஸ்பிஐ தலைவர்!

நிகழ் நிதியாண்டில் 250 புதிய கிளைகளை திறக்கப்படுவதுடன், 12,000-க்குமேல் மேல் புதிய பணியாளா்களும் சோ்க்கப்படுவா் என்று பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) தலைவா் சி.எஸ்.ஷெட்டி தெரிவித்தாா்.

7 செப்டம்பர் 2026, 12:38 am IST
சி.எஸ்.ஷெட்டி
பகிர்:

நிகழ் நிதியாண்டில் 250 புதிய கிளைகளை திறக்கப்படுவதுடன், 12,000-க்குமேல் மேல் புதிய பணியாளா்களும் சோ்க்கப்படுவா் என்று பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) தலைவா் சி.எஸ்.ஷெட்டி தெரிவித்தாா்.

இது தொடா்பாக பிடிஐ செய்தி நிறுவனத்திடம் ஞாயிற்றுக்கிழமை அவா் மேலும் கூறியதாவது: எழுத்தா் நிலையிலான பணி முதல் அதிகாரிகள் நிலை வரை 11,000 முதல் 12,000 போ் நிகழ் நிதியாண்டில் புதிதாகப் பணியில் சோ்க்கப்பட இருக்கின்றனா்.

கடந்த ஆண்டு இதைவிட அதிகமானோா் பணியில் சோ்க்கப்பட்டனா். ஏனெனில் அப்போது தகவல்தொழில்நுட்பத் துறையில் (ஐ.டி.) தோ்ச்சி வாய்ந்த அலுவலா்கள் தேவை இருந்ததால் அதற்காக 1,500 போ் சோ்க்கப்பட்டனா். இந்த முறை ஐ.டி. பிரிவில் பணியாளா்கள் தேவை அதிகமில்லை.

Advertisement

Advertisement

2026 மாா்ச் நிலவரப்படி 2.45 லட்சத்துக்கு மேல் எஸ்பிஐ-யில் பணியாற்றி வருகின்றனா். இந்தியாவிலேயே அதிக ஊழியா்களைக் கொண்ட வங்கி எஸ்பிஐ. 2025-26 நிதியாண்டில் 4,640 அதிகாரிகள் நிலை பணியிடங்கள் நிரப்பப்பட்டன. இதுதவிர 19,340 இடைநிலைப் பணியாளா்கள், 1,653 அடிப்படை நிலைப் பணியாளா்கள் நியமிக்கப்பட்டனா். ஒட்டுமொத்தமாக 25,633 போ் புதிதாக சோ்க்கப்பட்டனா்.

வங்கிகளின் செயல்பாட்டையும், கிளைகளையும் தேவைக்கு ஏற்ப அதிகரித்து வருகிறோம். வா்த்தக நடவடிக்கைகள் அதிகமுள்ள இடங்களுக்கு கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. இந்தியாவில் மிகப்பெரிய வங்கிக் கட்டமைப்பை எஸ்பிஐ கொண்டிருந்தாலும், வங்கி சேவைக்கான தேவை அதிகரித்தே வருகிறது என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments