டீ குடிப்பதை நிறுத்தினால் லட்சாதிபதியாகலாம்! எஸ்பிஐ-யின் புதிய திட்டம்!
கடையில் டீ குடிப்பதை நிறுத்திவிட்டு, அந்த செலவை சேமித்து, லட்சாதிபதியாகலாம் என எஸ்பிஐ புதிய திட்டத்தை அறிமுகம் செய்திருப்பது பற்றி..
டீ குடிப்பதை நிறுத்திவிட்டு, அதற்கு ஆகும் செலவை, தொடர் வைப்புத் திட்டத்தில் செலுத்தி, ஒவ்வொருவரும் லட்சாதிபதியாகலாம் என்று நாட்டின் முன்னணி வங்கியான எஸ்பிஐ ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது.
எங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஒரு பிரத்யேகமான தொடர் வைப்புத் திட்டத்தை (ரெக்கரிங் டெபாசிட் ) வழங்குவதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு வீட்டிலும் லட்சாதிபதி (ஹர் கர் லக்பதி - HGL) என்ற திட்டத்தை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது.
இத்திட்டத்தின் மூலம், எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு மாதமும் சிறிய சேமிப்புகளை வைப்புச் செய்வதன் மூலம் தங்கள் கணக்குகளில் ரூ.1 லட்சம் அல்லது அதற்கு மேல் திரட்டி, அந்த வைப்புத்தொகை முதிர்வடையும் போது லட்சாதிபதி ஆக முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
Advertisement
Advertisement
யாருக்கெல்லாம் பொருந்தும்?
இந்தியாவில் வாழும் அனைத்து தனிநபர்களும் தனியாக வங்கிக் கணக்கு அல்லது இருவர் இணைந்து வங்கிக் கணக்கைத் தொடங்கலாம். 10 வயதுக்கு மேற்பட்ட மற்றும் தெளிவாகக் கையெழுத்திடக்கூடிய சிறார்கள் தனியாகவும் வங்கிக் கணக்கைத் தொடங்கலாம்; இல்லையெனில், அவர்கள் தங்கள் பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலருடன் இணைந்து கணக்கைத் தொடங்கலாம்.
இந்த ரெக்கரிங் டெபாசிட் எனப்படும் இந்த தொடர் வைப்புத் திட்டத்தின் காலம் 3 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முதிர்வுத் தேதி
தொடர் வைப்புத் திட்டத்தின் (RD) முதிர்வுத் தொகை அருகிலுள்ள ரூபாய்க்கு முழுமையாக்கப்பட்டு, கடைசித் தவணை செலுத்தப்பட்ட 30 நாள்களுக்குப் பிறகு அல்லது ஒரு மாதத்திற்குப் பிறகு, அல்லது வைப்புத் தொகை ஏற்றுக்கொள்ளப்பட்ட கால அளவு முடிவடையும் தேதி - இவற்றில் எது அதிகபட்சமோ, அந்தத் தேதியில் வழங்கப்படும்.
மேலதிகத் தகவல்களை அறிய.. எஸ்பிஐ இணையதளத்தை நாடலாம்.
You could become a lakhpati by giving up tea! SBI's new scheme
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.